நுவரெலியா மாவட்ட பிரதம சுகாதார வைத்திய அதிகாரி பயணித்த கெப் விபத்துக்குள்ளனதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். 

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை சென்கிளேயர் பகுதியிலே இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனத்தின் முன் விளக்குகள் முகத்தில் பட்டமையினாலேயே கெப் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து கட்டிடமொன்றில் மோதுண்டுள்ளது. 

விபத்தில் வைத்திய அதிகாரிக்கும் சாரதிக்கும் எவ்வித பாதிப்புகளும் இல்லையென்றும் கட்டிடத்திற்கு கெப் வண்டிக்கும் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.