காய்ச்சிய குடிநீரின் ஆயுள் எவ்வளவு என்று தெரியுமா.?

Published By: Robert

03 Aug, 2017 | 11:13 AM
image

இன்றைய திகதியில் எம்மவர்கள் எதற்காக செலவழிக்கிறார்களோ இல்லையோ சுத்தமான குடிநீருக்காக செலவழிக்கிறார்கள். செலவழிக்கவும் தயாராகயிருக்கிறார்கள். ஆனால் பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் குடிநீர் எம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறதா? சாதாரணமாக இயற்கையாக கிடைக்கும் நீரில் உள்ள தாது சத்துக்களான மெக்னீசியம், கால்சியம், கார்பனேட், தாமிரம் போன்றவை இவற்றிலும் இருக்கிறதா? என்பதை பற்றி அறிந்துகொள்ளவேண்டும்.

இவர்கள் தண்ணீரை சுத்திகரிப்பு செய்கிறார்களேத் தவிர மேற்கண்ட தாதுச்சத்துகளை சேர்க்கிறார்களா என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அத்துடன் இத்தகைய தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தில் தண்ணீரை சுத்திகரிக்கவேண்டும் என்றால் மும்மடங்கு தண்ணீர் செலவாகுவதாகவும் தெரிய வருகிறது.

அதனால் பாதுகாப்பான தண்ணீரை அருந்துவதற்கு நாம் சில எளிய வழிகளை வீட்டிலேயே மேற்கொள்ளலாம். இயற்கையாக கிடைக்கும் மிக சிறந்த சுத்திகரிப்பான் செம்பு. செம்பு பாத்திரத்தில் ஒரு நாள் முழுவதும் தண்ணீரை விட்டு மறுநாள் அருந்தினால் அந்த தண்ணீர் பாதுகாப்பானதாக இருக்கும் என்கிறார்கள்.

அதே போல் எந்த தண்ணீராக இருந்தாலும் அதனை காய்ச்சி குடிக்கவேண்டியதில்லை. நோய் பரவும் பருவ காலமான மழைக்காலம் மற்றும் ஆடி மாதத்தில் மட்டும் தண்ணீரை காய்ச்சி குடிக்கலாம். அதுவும் இன்று காய்ச்சிய தண்ணீரை இன்றே குடித்துவிடவேண்டும். மறுநாள் குடிப்பதால் எந்த பலனும் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

அதே போல் நீரை கொதிக்கவைக்கும் முன் அதில் சிறிதளவு வறுத்த சீரகத்தைப்போட்டுவிட்டு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து, சற்று வெதவெதுப்பான இளஞ்சூட்டுடன் தண்ணீரை அருந்தினால் அஜீரண கோளாறு முற்றாக நீங்கும்.

நோயெதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.

Dr. சிவராமன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29