போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது - எஸ்.பி.திஸாநாயக்க

03 Oct, 2025 | 01:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

போதைப்பொருள் வர்த்தகர்கள் அரசியல்வாதிகளுக்கு உதவி செய்தார்கள்,அரசியல்வாதிகள் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு உதவி செய்தார்கள். போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. போதைப்பொருள் தொடர்பான வழக்கை விரைவாக நிறைவு செய்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்று உள்ளது.ஜனாதிபதி சீனாவுடன் இணக்கமாக செயற்படுவது சிறந்தது. சீனாவின் கம்யூனிச கொள்கைக்கு அமைவாக அடிப்படை நிர்வாக கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன நிலையில் எதிர்க்கட்சிகள் பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்துக்கு எதிராக முன்வைப்பதை அவதானிக்க முடிகிறது. குறுகிய அரசியல் கொள்கையுடன் அனைத்து விடயங்களையும் விமர்சிக்க முடியாது.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஏன் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்து எதனை சாதிக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை. அவ்வாறு ஒன்றிணைந்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவென்பது குறித்து எவ்வித  திட்டமும் கிடையாது. 

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்துள்ளன. தேசிய மக்கள் சக்தி பலமடைந்துள்ளது.இதுவே உண்மை.

போதைப்பொருள் பிரச்சினை நாட்டுக்கு சாபமாகவே காணப்படுகிறது. கடந்த காலங்களில் போதைப்பொருள் வர்த்தகர்கள் அரசியல்வாதிகளுக்கு உதவி செய்தார்கள், அரசியல்வாதிகள் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு உதவி செய்தார்கள். போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது.

போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தரப்பினரை கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்குகளை விரைவாக நிறைவு செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சமூக கட்டமைப்பில் இருந்து அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹவ்லொக் பகுதியில் துப்பாக்கி மீட்பு சம்பவம்:...

2026-07-10 18:54:56
news-image

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா?...

2026-07-10 17:52:32
news-image

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள்...

2026-07-10 18:07:24
news-image

பொரளை மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே...

2026-07-10 17:36:54
news-image

143 களஞ்சியசாலைகளில் திங்கள் முதல் நெல்...

2026-07-10 19:13:12
news-image

சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் அரசுக்கு 3.5...

2026-07-10 18:00:12
news-image

களனி கங்கையைப் பாதுகாப்பதற்கு வீடமைப்பு மற்றும்...

2026-07-10 16:52:31
news-image

சிறைச்சாலையில் மோதல் : அமைச்சரின் திட்டமிடல்...

2026-07-10 16:51:57
news-image

நாமல் ராஜபக்ஷ ‘ஏ – டீம்...

2026-07-10 16:51:18
news-image

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பிரித்து பேராதனை வைத்தியர்கள்...

2026-07-10 16:39:41
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைக்கு நீதியும் பொறுப்புக்கூறலும்...

2026-07-10 16:29:24
news-image

'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்திட்டம்...

2026-07-10 16:30:04