புரோட்டா சூரியாக நடித்து கொமடி நடிகரானவர் சூரி. அதற்கு பின் புஷ்பா புருஷன் என்ற கேரக்டரில் நடித்து சிரிக்க வைத்தார். இப்போது கதையின் நாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார்.

இவரை அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசீந்திரனே இவரை கதையின் நாயகனாகவும் அறிமுகப்படுத்துகிறார். இது குறித்த செய்தி இணையதளங்களில் வெளியானது. உடனே இதற்கு பதிலளித்திருக்கும் சுசீந்திரன்,‘ நான் தற்போது அறம் செய்து பழகு என்ற படத்தின் வெளியிட்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். அத்துடன் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் படத்தையும் இயக்கி வருகிறேன். ஆனால் இணையத்தில் வெளியானது போல் அப்படத்தின் பெயர் இளமை ஊஞ்சலாடுகிறது அல்ல. அப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறேன். அதுவரை காத்திருக்கவும்’ என்று பதிலளித்திருக்கிறார். 

வைகைப்புயல் வடிவேலு, சின்ன கலைவாணர் விவேக், சந்தானம் ஆகியோர் கொமடியிலிருந்து கதையின் நாயகனாக நடிக்க தொடங்கிய பிறகு அவர்களுக்கு ஏற்பட்ட முன்னேற்றம் சூரிக்கும் கிட்டும் என்று நம்புவோமாக...!

தகவல் : சென்னை அலுவலகம்