நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பட அப்டேட்

Published By: Vishnu

03 Oct, 2025 | 02:45 AM
image

தமிழ் சினிமாவின் லேடி சுப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' எனும் திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தோற்ற புகைப்படத்தை படக் குழுவினர் வெளியிட்டு, நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநரும், நடிகருமான சுந்தர் .சி இயக்கத்தில் உருவாகி வரும்' மூக்குத்தி அம்மன் 2 'எனும் திரைப்படத்தில் நயன்தாரா, ஊர்வசி, துனியா விஜய், ரெஜினா கசண்ட்ரா, யோகி பாபு , அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம் புலி, இனியா, மைனா நந்தினி, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். சமூக பக்தி படமாகவும், பிரம்மாண்ட படைப்பாகவும் தயாராகும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார்.

இந்திய மதிப்பில் நூறு கோடி ரூபாய் பட்ஜட்டில் தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நவராத்திரி திருவிழாவை சிறப்பிக்கும் பொருட்டு கதையின் நாயகியான மூக்குத்தி அம்மனின் தோற்றத்தை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மனாக தோன்றுவது.. ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்'...

2026-07-18 17:41:45
news-image

சரணடைய மறுக்கும் ஒரு பெண்ணின் உறுதியை...

2026-07-18 17:39:20
news-image

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'மிஸ்டர் பாரத்'...

2026-07-18 17:35:32
news-image

நடிகர் டி. அண்டனி நடிக்கும் 'ஏன்...

2026-07-18 17:32:38
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'இதயம்...

2026-07-18 16:07:53
news-image

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் 'சிவ...

2026-07-18 16:05:50
news-image

ஓகஸ்டில் வெளியாகும் மாதவனின் 'ஜி டி...

2026-07-18 14:33:40
news-image

லோகேஷ் கனகராஜ் கதையின் நாயகனாக வெற்றி...

2026-07-18 14:30:00
news-image

நடிகர் தனுஷ் வெளியிட்ட கிஷன் தாஸ்...

2026-07-18 14:26:40
news-image

நடிகர் லியோ சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி...

2026-07-18 14:23:23
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி...

2026-07-17 17:05:39
news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17