இதய சத்திர சிகிச்சையில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் நவீன தொழில்நுட்பம்

Published By: Vishnu

02 Oct, 2025 | 11:15 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் இதய ரத்த நாள அடைப்பு பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அதிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கொரனரி எனப்படும் இதய ரத்த நாள  பாதிப்பு ஏற்படுவது அதிகரித்திருக்கிறது. இவர்களுக்கு தற்போதுள்ள வைத்திய நடைமுறையில் மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சையின் காரணமாக பக்க விளைவு ஏற்படுமோ...!? என்ற அச்சம் நோயாளிகளின் மனதில் உள்ளது. இந்நிலையில் இத்தகைய பாதிப்பின் போது மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சையில் எண்டாஸ்கோபிக் வெயின் ஹார்வெஸ்ட்டிங் எனப்படும் புதிய தொழில்நுட்ப முறை பாவிக்கப்படுவதால்... நோயாளிகளுக்கு பலன் விரைவாக கிடைத்து வருவதாக வைத்தியர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக வைத்தியர்கள் விளக்கம் அளிக்கையில்..'' கொரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்டிங் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் இதயத்திலா மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சையின் காரணமாக.. சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் பலரும் இதன் பக்க விளைவு குறித்து அச்சமடைகிறார்கள். இதன் போது நோயாளிகளின் கால்பகுதியில் உள்ள ரத்த நாளங்களை வெட்டி அகற்றி இதய ரத்த நாளங்களுடன் பொருத்தப்படுவதால்... நோயாளிகளுக்கு நடப்பதில் அசௌகரியங்கள் ஏற்படும் என்றும், கால் பகுதியில் வலி உண்டாகிறது என்றும் குறிப்பிடுவார்கள்.

இத்தகைய சத்திர சிகிச்சை முறையில் தற்போது எண்டோஸ்கோபிக் வெயின் ஹார்வெஸ்டிங் எனும் நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.  இத்தகைய வைத்திய நடைமுறையின் போது கால் பகுதியில் உள்ள ரத்த குழாய்களை நுண்துளை சத்திர சிகிச்சை மூலம் எடுத்து அதனை இதயத்தில் பொருத்துவார்கள். இதன் காரணமாக கால் பகுதியில் இருந்து அகற்றப்படும் ரத்த நாளங்கள் பாதுகாப்புடன்... பக்க விளைவு ஏதும் இல்லாமல்... இதயத்தில் பொருத்தப்படுகிறது. இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகளாக இருந்தாலும் அவர்களுக்கு காலில் வலி ஏற்படுவதில்லை. அப்பகுதியில் தொற்று பாதிப்பும் உண்டாவதில்லை. சத்திர சிகிச்சைக்கு பிறகு உடனடியாக அவர்களால் நடக்கவும் முடிகிறது.‌ இத்தகைய பலன்களை வழங்குவதால் எண்டாஸ்கோபிக் வெயின் ஹார்வெஸ்டிங் எனும் நவீன தொழில்நுட்பம் நோயாளிகளிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது '' என்றனர்

வைத்தியர் முத்துக்குமரன்

தொகுப்பு அனுஷா.

 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41
news-image

தசை இறுக்கத்திற்கு நிவாரணமளிக்கும் பனிக்கட்டி குளியல்...

2026-08-04 15:26:44
news-image

ப்ரௌன் ஃபேட் எனும் பழுப்பு கொழுப்பு...

2026-08-01 17:00:28
news-image

குரல் வளை முடிச்சு அல்லது குரல்...

2026-07-31 16:37:19
news-image

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை :...

2026-07-31 14:15:13
news-image

புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-30 17:14:50
news-image

மேல் தோல் பகுதியில் உள்ள மரபணுகளின்...

2026-07-29 17:03:14
news-image

கட்டுப்பாடற்ற சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு நிவாரணம்...

2026-07-28 17:21:34
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நியோஅட்ஜுவன்ட்...

2026-07-27 15:27:06
news-image

ஸ்கிசோஃப்ரினியா எனும் நாட்பட்ட மன சிதைவு...

2026-07-25 15:34:51