வேலை கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு...!?

Published By: Vishnu

02 Oct, 2025 | 11:10 PM
image

இன்றைய போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த உலகத்தில் எம்முடைய திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்காது. இருப்பினும் வாழ்வாதாரத்திற்காக ஏதேனும் ஒரு பணியினை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இதில் சிலர் நேர்காணல்களில் பங்கு பற்றிய பிறகும் வேலைக்கான வாய்ப்பு கிடைக்காது. சில தருணங்களில் பலருக்கும் விரும்பிய வேலையோ அல்லது ஏதேனும் ஒரு வேலையோ கிடைக்காத சூழல்தான் நீடிக்கும். இந்நிலையில் வேலை கிடைக்க வேண்டும் என்றால்.. எம்முடைய முன்னோர்கள் அதற்கும் ஒரு சூட்சமமான வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.

 இதற்கு தேவையான பொருட்கள் : ஒரு செப்பு பாத்திரம்- தண்ணீர் -சிவப்பு வண்ண மலர்கள் -நாட்டு சர்க்கரை- குங்குமம்.

 இந்நிலையில் நாந்தம் காலையில் 7:00 மணிக்குள்ளாக ஒரு நேரத்தை தெரிவு செய்து , தொடர்ந்து 43 நாட்கள் வரை பின்வரும் வழிபாட்டை சூரிய காயத்ரியுடன் மேற்கொள்ள வேண்டும். சூரிய பகவானின் நாள் என போற்றப்படும் ஞாயிற்றுக்கிழமையில் இத்தகைய பிரார்த்தனையை தொடங்குவது உத்தமமான பலனை வழங்கும். ஞாயிற்றுக்கிழமையில் காலையில் ஆறு முப்பது மணிக்குள் எழுந்து, நீராடி, ஒரு செப்பு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் சிவப்பு வண்ண மலர்களை தூவி, அதனுடன் சிறிதளவு நாட்டு சர்க்கரை மற்றும் குங்குமத்தை கலந்திட வேண்டும். அதன் பிறகு அந்த நீரை கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனிடம் காண்பித்து, உங்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த பிரார்த்தனையை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு அந்த செப்பு பாத்திரத்தில் உள்ள நீரை கீழிருந்து மேலாக ஒரு பாதுகாப்பான இடத்தில் ஊற்றி விட வேண்டும். 43 நாட்களுக்கு தொடர்ந்து நீங்கள் மேற்கொள்ளும் இத்தகைய வேலை வாய்ப்பிற்கான பிரத்யேக வழிபாட்டின் மூலம் உங்களுக்கான வேலை வாய்ப்பு கிடைப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைவீர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31
news-image

தொழிலில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான சூட்சம...

2026-08-01 17:06:21
news-image

கர்ம வினைகளின் தாக்கத்தை அளிப்பதற்கான பிரத்யேக...

2026-07-31 17:00:24
news-image

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் -...

2026-07-31 15:07:30
news-image

நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான எளிய...

2026-07-30 17:19:48
news-image

சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பதற்கான சூட்சம வழிமுறை..!?

2026-07-29 17:05:08