நாட்டின் வட பகு­தியில் நிலவும் கடும் வரட்சி கார­ண­மாக வட­மா­கா­ணத்தின்  670 கிராம சேவைப் பிரி­வு­களில் நீர் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ள­தை­ய­டுத்து 4 இலட்­சத்து 62 ஆயி­ரத்து 991 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மக்­களின் குடி­நீ­ருக்கு பாரிய தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­துடன் விவ­சாயம் பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. 

வட பகு­தியில் தொடர்ச்­சி­யாக  அதி­க­ரித்த வெப்பக் கால­நிலை கார­ண­மாக   வடக்கில் கடும் வறட்சி நில­வு­கின்­றது.  இந்த வறட்சி  கார­ண­மா­கவே  வட­மா­கா­ணத்தில் 670 கிராம சேவைப் பிரி­வு­களில் நீர் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. நிலவும் வறட்சி கார­ண­மாக  வடக்கில்  1 இலட்­சத்து 33 ஆயி­ரத்து  758 குடும்­பங்­களை சேர்ந்த  4 இலட்­சத்து 62 ஆயி­ரத்து 991 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. .

இதே­வேளை  யாழ். மாவட்­டத்தில் சுமார் 267 கிராம சேவைப் பிரி­வு­களில் 34,000க்கும் அதி­க­மான குடும்­பங்­களை சேர்ந்த 1 இலட்­சத்து 24 ஆயி­ரத்து 382 பேர்  பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், இவ்­வ­றட்­சியின் மூலம் வட­மா­கா­ணத்தில் யாழ். மாவட்ட மக்­களே அதிகம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. 

 இந்த வறட்சி கார­ண­மாக முல்­லைத்­தீவு மாவட்­டத்தில்  35 ஆயி­ரத்து 730 குடும்­பங்­களை சேர்ந்த   1 இலட்­சத்து 15 ஆயி­ரத்து 308 பேரும்  வன்னி மாவட்­டத்தில் 24 ஆயி­ரத்து 507  குடும்­பங்­களை சேர்ந்த  85 ஆயி­ரத்து 771 பேரும், மன்னர் மாவட்­டத்தில் 15 ஆயி­ரத்து 386  குடும்­பங்­களை சேர்ந்த  54 ஆயி­ரத்து 152 பேரும் கிளி­நொச்சி மாவட்­டத்தில் 24 ஆயி­ரத்து 006 குடும்­பங்­களை சேர்ந்த  83 ஆயி­ரத்து 378 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.  

வடக்கில் யாழ்ப்­பாணம் மாவட்­டத்தில் 12 ஆயி­ரத்து 233 குடும்­பங்­க­ளுக்­காக குடிநீர் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 4071 குடும்­பங்­க­ளுக்கு குடிநீர் விநி­யோகம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  , மன்னார் மாவட்­டத்தில் 3160 குடும்­பங்­க­ளுக்கு குடிநீர் விநி­யோகம் இம்­பெ­று­வ­தா­கவும் , வன்னி மாவட்­டத்தில் 3395 குடும்­பங்­க­ளுக்கு குடிநீர் வழங்­கி­யுள்­ள­தா­கவும் கிளி­நொச்சி மாவட்­டத்தில் 5705 குடும்­பங்­க­ளுக்கு குடிநீர் வழங்­கி­யுள்­ள­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் குறிப்­பிட்­டுள்­ளது. 

இர­ணை­மடு  குளத்தில் நீர் மட்டம் குறை­வ­டைந்­துள்­ள­துடன் விவ­சாய செயற்­பா­டு­களும் முழு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மக்கள் கவலை தெரி­வித்­துள்­ளனர். தமது வாழ்­வா­தார நட­வ­டிக்­கைகள் வெகு­வாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், குடிநீர் மற்றும் விவ­சாய நட­வ­டிக்­கை­க­ளுக்­கான நீரை பெற்­றுக்­கொள்ளும் மாற்று வழி­முறை ஒன்றை பெற்­றுத்­தர வேண்டும் என பாதிக்­கப்­பட்ட மக்கள் தெரி­வித்­துள்­ளனர். 

இந்­நி­லையில் வறட்­சி­யினால் ஏற்­பட்ட நீர்  பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்­வ­தற்கு பிர­தேச செய­லகம் மற்றும் மாவட்ட செய­ல­கங்கள் ஒன்­றி­ணைந்து பவுசர் வண்டி மூலம் நீர் விநி­யோ­யகம் செய்­தாலும் அந்நீர் தமது அன்­றாட நடவடிக்கைகளுக்கு போதியதாக இல்லை என பொது மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசாங்கம் மூலமாக நீர் விநியோக நடவடிக்கைகளை நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு முன்னெடுத்து வருவதாகவும் பவுசர்கள் மூலமாக நீர் பெற்றுத்தரும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.