நவராத்திரி – ஒன்பது இரவுகள், ஒன்பது உணர்வுகள்

02 Oct, 2025 | 06:07 PM
image

நவராத்திரி – ஒன்பது இரவுகள், ஒன்பது உணர்வுகள்

பண்டைய புராணக் கதைகள் சொன்னது –

மகிஷாசுரனை வீழ்த்திய தேவியின் வீரக் கதை,

அதில் மறைந்தது ஒரு உளவியல் சிந்தனை –

அகந்தை அழிந்தால் மட்டுமே அறிவு மலரும்!

வரலாறாக நிற்கும் திருவிழா,

விழிப்புணர்வை விதைக்கும் சின்னமாகும்;

பெண்ணின் சக்தி, தாயின் கருணை,

சமூகத்தில் சமநீதி பேசும் தாளமிது.

ஒன்பது நாட்கள் – ஒன்பது நிறங்கள்,

ஒவ்வொரு நிறமும் மனதின் ஓர் நிலை;

சிவப்பு வீரத்தைக் குறிக்கும்,

வெள்ளை அமைதியை வளர்க்கும் –

உளவியல் ஆய்வில் இது சிகிச்சைதான்,

நிறங்களால் மனம் மாற்றமடைதல்!

கோலுகள், கலைகள், கதைப்பாடல்கள் –

படைப்பாற்றல் பறக்கும் மேடையிது;

பொம்மலாட்டத்தில் பேசும் சமூகச் செய்தி,

சிறுவர் மனதில் விழும் விதைகள் அறிவு.

ஆராய்ச்சிகள் சொல்கின்றன –

கூட்டு வழிபாடு மனஅழுத்தம் குறைக்கும்,

இசை, நடனம், நிறங்கள் மனநலனைக் கூட்டும்,

இதில் தான் நவராத்திரியின் தரமான சான்று!

புராணங்களில் நம்பிக்கைகள் விதைக்க,

சமூகத்தில் புதிய நம்பிக்கை மலர்கிறது;

இன்று பெண்கள் கல்வியால் எழுந்திட,

தேவியின் சக்தி உயிர்த்தெழும் கதையாகிறது.

நவராத்திரி ஒரு விழா மட்டும் அல்ல –

உள் போராட்டங்களின் மனவியல் கற்றல்;

சிந்தனை, சமூக ஒற்றுமை, படைப்பாற்றல்,

அனைத்தையும் இணைக்கும் ஒளிவிழா.

ஒன்பது இரவுகள் முடிந்தபின் உதயம் –

நம்பிக்கையின் புது காலையிது;

அறிவு, அன்பு, அமைதி சேர்ந்து –

மனித சமுதாயம் உயரும் பாதையிது.

- நடராசா கோபிராம்,

உளவியல் சிறப்புக் கலை மாணவன் 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல ஜனாதிபதிகளிடமும் பணியாற்றிய ராகுலன்

2026-07-03 18:32:01
news-image

மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்...

2026-06-29 09:52:06
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு...

2026-06-26 18:41:54
news-image

முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த...

2026-06-23 16:55:38
news-image

யாழ். நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்...

2026-06-21 16:13:50
news-image

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் மஹோற்சவம்...

2026-06-13 16:32:13
news-image

மலையகத்தின் வலியும் ஒரு சுயாதீனக் குரலின்...

2026-06-11 09:05:37
news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05
news-image

தமிழைத் தமிழாக உலக அரங்கில் எடுத்துச்...

2026-04-11 18:56:28
news-image

'நாட்டிய வைபவம்' : நாட்டிய கலா...

2026-04-11 12:15:17