“மது இல்லா சமூகம் – மன நிம்மதி சாலை”
பானம் எனும் பெயரில் போதை கொடுத்து,
பார்வையை மங்கச் செய்கிறது மதுவின் வலிமை.
சிறு சிரிப்பை அழுகையாக்கி,
சிறந்த குடும்பத்தை சிதைக்கிறது அதின் கொடுமை.
மனதைத் தூக்கி நிறுத்தும் வலுவில்லை,
உடலை சிதைக்கும் சுகமுமில்லை,
நொடிகளில் நசுக்கும் ஒரு நஞ்சு அது –
நம் சமூகத்தின் அமைதியை கெடுக்கும் கருவி அது.
இன்று இலங்கை கடற்கரையில் இருந்து,
மலையினின் நிழலில் வாழும் கிராமம் வரை,
"மது விடு, மனம் விடுதலை பெறும்"
என்ற ஓசை எழுகிறது விழிப்புணர்வாய்.
உளவியலின் கண்ணோட்டம் சொல்கிறது –
அழுத்தத்தைத் தீர்க்க மதுவல்ல,
அன்பும் ஆதரவும் தான் நிவாரணம்;
நம்பிக்கையும் வழிகாட்டுதலும் தான் மன நிம்மதி.
குழந்தையின் கண்களில் கண்ணீர் வராமல்,
பெண்ணின் நெஞ்சில் வலி பொங்காமல்,
சமூகத்தின் தூண்கள் சிதையாமல் –
மது ஒழிப்பே நாம் கொண்டாட வேண்டிய சுதந்திரம்.
நம் வாழ்வை பசுமையாக்கும் விதை போல்,
நம்பிக்கையை விதைப்போம் ஒவ்வொரு மனதில்.
சர்வதேச மது ஒழிப்பு தினம் –
புதிய உலகிற்கு மனிதநேயம் ஊற்றும் தினம்!
- நடராசா கோபிராம்,
உளவியல் சிறப்புக் கலை மாணவன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM