அரசாங்கத்தை சிரமத்துக்குள்ளாக்குவதற்கும் பொது மக்களின் நடவடிக்கைகளை மட்டுப்படுத் தும் நோக்கத்திலும் சில தொழிற் சங்கங்கள் பஷில் ராஜபக் ஷவின் அரசியல் நிகழ்ச்சி நிரலை செயற்ப டுத்த போராட்டங்களை மேற்கொள்கின் றன. 

எந்தளவு போராட்டங்களை மேற்கொண்டாலும் அவற்றுக்கு முறை யான தீர்மானங்களைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் பின்னிற்கப் போவதில்லை என அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இரத்தினபுரி கெஹெல் ஓவிட்ட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ் வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டில் இன்று பல பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. ஒரு குழு சைட்டம் வேண்டாம் என்றும் மற்றுமொரு குழு உமா ஓயா வேண்டாம் என்றும் ஆர்ப்பாட்டம் செய்கின்றன. என்றாலும் கடந்த 15 வருடங்களாக இவர்கள் எங்கு இருந்தார்கள் என்று தெரியவில்லை. 

கடந்த காலத்தில்  சண்டித்தனத்தாலும் குண்டர்களா லும் ஆர்ப்பாட்டங்கள் அடக்கப்பட்டன. அத்துடன் அமைச்சர்கள் கூட ஜனாதிபதியினால் அடிவாங்கிய காலம் என்றபடியால் அனைவரும் அமைதியாக இருந்தனர்.

அத்துடன் கொழும்பு துறைமுக நகர் அமைக்க சீன நிறுவனத்துக்கு 600 ஏக்கர் காணி உரித்துரிமை அடிப்படையில் மஹிந்த ராஜபக் ஷ வழங்கியிருந்தார். அதனை எமது அரசா ங்கம் ரத்துச்செய்து தற்போது குத்தகை அடிப்படையில் வழங் கியுள்ளோம். அதேபோன்று ஷங்கிரில்லா ஹோட்டல் அமைக்க 2 ஏக்கர் காணியை  சீனாவுக்கு விற்பனை செய்திருந்தது. அதனையும் எங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியுமாகியது.

ஆனால் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும்போது துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களே வேறு யாரு டைய தேவைக்கு ஆர்ப்பாட்டம் செய்தனர். 

பஷில் ராஜபக் ஷவின் அரசியல் நிகழ்ச்சி நிரலின்கீழ் செயல்பட்டு, பொது மக்களின் வேலைத்திட்டங்களை அடக்குவதே இவர் களின் திட்டமாக இருந்தது.

அத்துடன் மகாவலி அபிவிருத்தி வேலை த்திட்டத்தின் பின்னர் கூடுதலான வருமானம் நாட்டுக்கு கிடைக்கும் வேலைத்திட்டமாக இருப்பது அம்பாந்தோட்டை துறைமுக த்தை அபிவிருத்திசெய்யும் நடவடிக்கை யாகும். இதுதொடர்பாக யாரும் கதைக்கமாட்டார்கள். அதனால் அரசாங்கத்தை வீழ்த் தும் நோக்கில் எதிரணி எவ்வாறான போரா ட்டங்களை முன்னெடுத்தாலும் அரசாங்கம் அவற்றுக்கு முறையாக முகம்கொடுக்க தயாராகவே இருக்கின்றது என்றார்.