ஒக்டோபர் 10 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இராணுவத்தின் 76 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் சர்வமத ஆசீர்வாத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக மேலும் இரண்டு மத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் தலைமையில் சிறப்பு கிறிஸ்தவ ஆசீர்வாதம் மற்றும் இஸ்லாமிய மத ஆசீர்வாத நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இராணுவத்தின் அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
இராணுவக் கொடிகளுக்கான கிறிஸ்தவ ஆசீர்வாதம் புதன்கிழமை (01) கோட்டை புனித தோமையர் தேவாலயத்தில் நடைபெற்றது. இதில் கொழும்பு மறைமாவட்ட ஆயர் என்டன் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஏனைய சபைகளைச் சேர்ந்த பல பாதிரியார்கள் கலந்து கொண்டனர்.
மேலும், 76 வது இராணுவ ஆண்டு நிறைவு விழாவிற்கான ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக 2025 ஒக்டோபர் 02 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு 'கிராத்' பிரார்த்தனை இடம்பெற்றதுடன், பிரதம மௌலவி ரிஸ்வான் மற்றும் பல மௌலவிகளின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM