கருத்து வெளியிடும் சுதந்திரத்தை முறைகேடாக பயன்படுத்த கூடாது - போலியான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு

02 Oct, 2025 | 05:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான கருத்து வெளியிடும் சுதந்திரத்தை நியாயத்தை நிலைநாட்டும் செயற்பாட்டுக்கான தடையாகவும், அல்லது ஊழலை இல்லாதொழிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் காணப்படும் அபிசாலைகளையும் பலவீனப்படுத்துவதற்கு முறைகேடாக பயன்படுத்தக் கூடாது. ஆணைக்குழுவை தொடர்புப்படுத்தி குறிப்பிடப்படும் போலியான கருத்துக்கள் மற்றும் செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பின்வாங்க போவதில்லை என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பல்வேறுப்பட்ட குறுகிய நோக்கங்களுடன் செயற்படும் ஒருசிலர் மற்றும் நிறுவன்கள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு பற்றி அடிப்படையற்ற மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் கருத்துக்களை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் குறிப்பிடுவதையிட்டு கவலையடைகிறோம்.

இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளினால் ஆணைக்குழுவின் கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், ஆணைக்குழுவின் சுயாதீனம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறானதொரு நிலைப்பாடு ஏற்டுபடும்.

ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகார சுயாதீனத்தன்மை மற்றும் அச்சமின்றி அல்லது பக்கச்சார்பின்றி செயற்படுவதற்கு 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம் மற்றும் ஏனைய அரசியலமைப்பு திருத்தங்கள் ஊடாக தத்துவங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மீண்டும் குறிப்பிட்டுக்கொள்கிறோம்

அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான கருத்து வெளியிடும் சுதந்திரத்தை நியாயத்தை நிலைநாட்டும் செயற்பாட்டுக்கான தடையாகவும், அல்லது ஊழலை இல்லாதொழிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் காணப்படும் அபிசாலைகளையும் பலவீனப்படுத்துவதற்கு முறைகேடாக பயன்படுத்தக் கூடாது.

அதற்கமைய ஆணைக்குழு தொடர்பில் தவறான விடயங்களை குறிப்பிடுதல் அல்லது ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர் அல்லது நிறுவனம் தொடர்பில் ஊழல் எதிர்ப்புச் சட்டம் மற்றும் உரிய ஏனைய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அவசியமான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஆணைக்குழு பின்வாங்காது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09