இலங்கையில் அனுஷ்டிக்கப்பட்ட 156ஆவது காந்தி ஜெயந்தி நிகழ்வுகள் 

02 Oct, 2025 | 06:30 PM
image

ந்திய நாட்டின் தேசப் பிதா என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 156வது பிறந்த தினமானது காந்தி ஜெயந்தியாக இலங்கையின் பல பிரதேசங்களில் இன்று (ஒக். 2) அனுஷ்டிக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் 

மகாத்மா காந்தியின் 156வது காந்தி ஜெயந்தி கொண்டாட்ட நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்திய துணைத்தூதர் சாய் முரளி, வட மாகாண பிரதம செயலாளர் மு.தனுஜா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். மாநகர பிரதி முதல்வர் இ.தயாளன், யாழ். மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் மற்றும் சமய சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது காந்தீயம் ஏடு வெளியிட்டு வைக்கப்பட்டு, அதன் பிரதி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதேவேளை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் துவிச்சக்கரவண்டி பவனியொன்றும் இடம்பெற்றது.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் ஜனன தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை (2) நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்ததுடன், காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன், வர்த்தக சங்க செயலாளர், சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

இதன்போது இலங்கை காந்தி சேவா சங்கத்தினால் வெளியிடப்படும் “காந்தியம்” சிறப்பு மலர் அதன் பிரதம ஆசிரியர் எம்.ஷாந்தன் சத்தியகீர்த்தியினால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், முதல் நூல் பிரதி பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50