மட்டக்களப்பு ஆரையம்பதியில் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

02 Oct, 2025 | 03:10 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 ஆயிரம் மில்லியனுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடுகளில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன என பராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பிரயாணிகளின் வருகைக்காக க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஊடாக கரையோர கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலமையில் ஆரையம்பதி கடற்கரையில் புதன்கிழமை (01) அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வு பெற்றது.

மண்முனைப்பற்று உதவிப் பிரதேசெயலாளர் பார்த்தீபன், நட்புக்கு உயிர்கொடுப்போம் எனும் அமைப்பின் ரா.யோகேஷ்குமார்,  மண்முனைப்பற்று பிரதேசசபையின் உதவித்தவிசாளர் மற்றும், பிரதேசசபையின் செயலாளர் மற்றும் பிரதேசசபையின் உறுப்பினர்கள், கிராம உத்தியோகஸ்தர், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன. அதுபோல் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக தற்போது நாங்கள் 9 ஆயிரம் மில்லியனுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடுகளில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன.

மக்களின் நீண்டகாலத் தேவையாகக் கருதுகின்ற வேலைத்திட்டங்களுக்கே நாம் அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்திருக்கின்றோம்.

அதுபோல் வருகின்ற வருடத்திலும் பல வேலைத்திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு நாங்கள் தயார்படுத்தல்களை மேற்கொண்டிருக்கின்றோம். என இதன்போது  தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருநாகலில் அரிய கடல்வாழ் உயிரின ஓடுகளை...

2026-09-07 17:40:40
news-image

'கொஸ் மல்லி'யின் மைத்துனரான 'பூத களுவா'...

2026-09-07 17:39:52
news-image

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சில கருத்துகள்...

2026-09-07 17:38:14
news-image

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு குறித்து ஐ.நா....

2026-09-07 17:17:59
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2026-09-07 17:36:25
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி...

2026-09-07 16:01:44
news-image

சுற்றுச்சூழல் அறிக்கையிடலில் புதிய ஊடக முன்முயற்சி

2026-09-07 15:33:29
news-image

ராஜபக்‌ஷ ஆட்சியாளர்களின் ஊழல்களே நாட்டின் பொருளாதார...

2026-09-07 15:24:19
news-image

நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் போக்குவரத்து சேவையை...

2026-09-07 15:32:04
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்டது வீதி: பொலிஸ் வாகனங்களில்...

2026-09-07 15:14:09
news-image

நல்லூர் தேர் திருவிழாவன்று யாழ். நல்லூர்...

2026-09-07 15:01:28
news-image

சம்மாந்துறை பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள்...

2026-09-07 14:56:43