செலான் வங்கி பிஎல்சி, இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்துடனான (NCE) தனது மூலோபாய இணைவை தொடர்ந்து நான்காவது வருடமாக புதுப்பித்துள்ளது. இந்த ஒப்பந்தம் கொழும்பில் உள்ள செலான் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இரு நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த தொடர்ச்சியான இணைவின் மூலம் செலான் வங்கி, தற்போது உலகளாவிய சந்தையில் காலடி எடுத்து வைக்க முயலும் மற்றும் தற்போதுள்ள அதன் சர்வதேச எல்லையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட NCE உறுப்பினர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட நிதி தீர்வுகளை வழங்கவுள்ளது.
இந்தக் கூட்டாண்மை, ஏற்றுமதி நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிக்கவும், இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார மீட்சிக்கு பங்களிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் இணைவு குறித்து செலான் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ரமேஷ் ஜயசேகர கருத்து தெரிவிக்கையில், "எங்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் ஏற்றுமதித் துறையை குறிப்பாக SMEகளை வலுவூட்டுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
NCE உடனான எங்கள் நீண்டகால இணைவு, ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாட்டு சந்தைகளில் வெற்றிபெறத் தேவையான நிதி கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதில் எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் அதே நேரத்தில் தேசிய பொருளாதாரத்திற்கும் பங்களிக்கிறது." என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM