குறட்டை ஒரு நோயா? அல்லது நோயின் அறிகுறியா..?

02 Oct, 2025 | 10:40 AM
image

எம்மில் சிலர் இரவு நேர உறக்கத்தின் போது குறட்டை விட்டு தூங்குவார்கள். இவர்களை 'ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருக்கிறார். அதனால் மகிழ்ச்சியானவர் 'என பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் பலரும் குறட்டை விட்டு தூங்குவது ஒரு நோய் தான் என குறிப்பிடுகிறார்கள். இவற்றில் எது உண்மை? என்று குழப்பம் பலருக்கும் ஏற்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பான விளக்கத்தை வைத்தியர்கள் பின்வருமாறு வழங்குகிறார்கள்.

உடல் உழைப்பை நாளாந்தம் மேற்கொற்பவர்கள் இரவில் உறங்கும் போது சீரான மற்றும் சிறிய அளவிலான ஒலியுடன் கூடிய குறட்டை விட்டு உறங்குவார்கள். இவர்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வது உண்மை தான்.

இவர்களுடைய குறட்டை நோயல்ல என குறிப்பிடலாம். ஆனால் குறட்டை சில நோய் பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கக்கூடும்.  அதனால் குறட்டை விட்டாலே...! அது ஆபத்து தான் என அச்சப்பட வேண்டியதில்லை.

நீங்கள் குறட்டை விட்டு தூங்கினாலும் குறட்டை விடாமல் தூங்கினாலும் ஆரோக்கியமாக உறங்கினால் எந்த தொந்தரவும் இல்லை.

ஆனால் காலையில் எழுந்ததும் உற்சாகம் இல்லாமல் சோர்வாக இருப்பதை உணர்ந்தாலோ அல்லது சுறுசுறுப்பு இல்லாமல் இருந்தாலோ அல்லது நினைவுத்திறனில் பாதிப்பு குறைபாடு ஏற்பட்டாலோ அன்றைய பொழுது முழுவதும் பகலில் உறங்க வேண்டும் என்ற உணர்வு எழுந்தாலோ அப்போது அவர்கள் இரவில் விடும் குறட்டை அவர்களுக்கு நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம் என அவதானிக்கலாம்.

அதே தருணத்தில் குறட்டை அருகில் உறங்கி இருக்கும் நபர்களுக்கு அசௌகரியமாகவும், சங்கடமாகவும் மாறினால் அதுவும் நோயின் அறிகுறி தான். இதுபோன்ற வகைப்படுத்தப்படும் குறட்டைகளுக்கு அவசியம் சிகிச்சை பெற வேண்டும்.

வைத்தியர் ராமகிருஷ்ணன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெம்பிகஸ் வல்காரிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2026-07-15 15:09:00
news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48