மன்னாரில் ஒரே நாளில் பல உணவகங்கள் மீது சுகாதார நடவடிக்கை!

Published By: Digital Desk 1

02 Oct, 2025 | 10:04 AM
image

மன்னார் நகரசபை எல்லைக்குள், உரிய சுகாதார நடைமுறைகளை பின் பற்றாது இயங்கி வந்த ஒரு வெதுப்பகம் உட்பட மூன்று உணவகங்கள் மீது நகர சபை சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் (30) மன்னார் பொது வைத்தியசாலையை சூழ உள்ள உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்களில் மன்னார் நகர சபை சுகாதர பரிசோதகர் மற்றும் மன்னார் நகர சபை சுகாதார குழுவினர் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போதே, மேற்படி சுகாதார நடை முறைகளை பின்பற்றாமல் இயங்கி வந்த உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, உரிய அனுமதி இன்றி இயங்கி வந்த உணவகங்கள், கழிவு நீர் உரிய முறையில் அகற்றப்படாமல் இயங்கி வந்த வெதுப்பகம், மருத்துவ சான்றிதல் இன்றி பணிபுரிந்த ஊழியர்கள், அதிகளவான இளையான்கள், சுகாதார நடைமுறையை பின் பற்றாது உணவுகள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்தமை உள்ளடங்களாக பல்வேறு சுகாதார பிரச்சினைகளின் அடிப்படையில் உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது .

அதன் அடிப்படையில் குறித்த உணவகங்களுக்கு எதிராக எதிர்வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகையிரத பொது முகாமையாளரை பதவி விலகக்...

2026-09-16 23:26:17
news-image

புதிய சீனத் தூதுவர் வீ ஹுவாஷியாங்...

2026-09-16 22:09:21
news-image

ராஜபக்‌ஷ குடும்பத்தை இம்ரான் கான் அல்லது...

2026-09-16 16:49:17
news-image

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு நெருக்கடி: மருந்து...

2026-09-16 16:22:25
news-image

இலங்கையை பிராந்திய நிதித் தொழில்நுட்ப மையமாக...

2026-09-16 16:46:15
news-image

மட்டக்குளி பகுதியில் கோர விபத்து –...

2026-09-16 22:07:10
news-image

மாணவர் குறைவான கிராமப்புற பாடசாலைகளை மூட...

2026-09-16 16:48:05
news-image

“சிரிலிய சவிய” நிதி மோசடி வழக்கு...

2026-09-16 19:27:20
news-image

தமிழ் பேசும் சமூகங்கள் நாட்டின் அரசியலை...

2026-09-16 20:29:10
news-image

நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கல்: செயற்கை...

2026-09-16 14:02:12
news-image

மன்னார் வைத்தியசாலையில் இந்திய நிதியுதவியுடன் அவசர...

2026-09-16 19:10:32
news-image

22ஆவது திருத்தத்துக்கு எதிராக இன்று கூட்டம்;...

2026-09-16 19:03:25