கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று புதன்கிழமை (01) பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
முகமாலை வடக்கு பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டியுள்ளார். இதன்போது அப் பகுதியில் ஆபத்தான வெடிகுண்டுகள் காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து வீட்டு உரிமையாளர் உடனடியாக பளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
அதன் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடிகுண்டுகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM