அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட அறுவருக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

Published By: Digital Desk 1

02 Oct, 2025 | 09:43 AM
image

வெள்ள நிவாரணம் வழங்குவதாக கூறி 61 மில்லியன் ரூபா பணத்தை முறைக்கேடான விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 6 பேருக்கு எதிராக நேற்று புதன்கிழமை (01) உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

2014 ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபாவை முறைகேடான விதத்தில் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது  மனைவிக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடுளிக்கப்பட்டது. 

பிங்கிரிய மற்றும் நரம்மல ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்  ஊடாக  61 இலட்சத்து 46 ஆயிரத்து 110  ரூபா நிதியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

எனினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதை வழங்காது  2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக அந்நிதியை பயன்படுத்தியதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே மேற்படி குற்றச்சாட்டின் பேரில் 2025 ஜனவரி 23 ஆம் திகதி அனுர பிரியதர்ஷன யாப்பா  உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் அன்றைய தினம் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேற்படி மோசடி தொடர்பில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கை நேற்று ( 1) சட்டமா அதிபரினால்  உயர் நீதிமன்ற நீதியரசர் உதேஷ் ரணதுங்க முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது.  அதற்கமைய திருத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் பிரதான சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனுர பிரியதர்ஷன யாப்பாவின் ஒருங்கிணைப்பு செயலாளராக கடமையாற்றிய அனுர செனவிரத்ன எனும் நபரும் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அவர்களிடம் சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி (புதன்கிழமை) அன்று மீண்டும் வழக்கு விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என  உயர் நீதிமன்ற நீதியரசர் உதேஷ் ரணதுங்க இதன்போது உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரீட்' படத்தின்...

2026-02-12 14:37:56
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:06:20
news-image

பிலியந்தலையில் விசேட சோதனை ; போதைப்பொருள்...

2026-02-12 14:05:59
news-image

கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலுக்கு எதிராக...

2026-02-12 13:42:36
news-image

மாத்தளையில் விரைவில் குரங்குகளுக்கான சரணாலயம்!

2026-02-12 13:18:11
news-image

குப்பை போடுபவர்களுக்கு எதிராக நல்லூர் பிரதேச...

2026-02-12 14:18:25
news-image

பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சிறுவனின்...

2026-02-12 14:16:14
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-02-12 12:46:27
news-image

கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

2026-02-12 12:38:44
news-image

கொழும்பில் பாடசாலையின் மதில் இடிந்து விழுந்ததில்...

2026-02-12 12:36:46
news-image

வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு...

2026-02-12 12:26:50
news-image

அல்லைப்பிட்டி சம்பவம் ; உயிரிழந்த சிறுவன்...

2026-02-12 12:06:36