எரிசக்தி அமைச்சரான பொறியியலாளர் குமார ஜயக்கொடி செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் இந்தியாவில் நடைபெற்ற 6வது சர்வதேச எரிசக்தி மாநாடு மற்றும் கண்காட்சியில் (IECE 2025) கலந்துகொண்டார்.
இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII), புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE), மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் புதிய, வளர்ந்து வரும் மற்றும் மூலோபாய தொழில்நுட்பங்கள் பிரிவு (NEST) ஆகியவை இணைந்து புது டெல்லியில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.
மாநாட்டின் கருப்பொருள் “இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தை செலுத்துதல்: நிகர பூஜ்ஜியத்திற்கான பாதை (Driving India’s Energy Transition: Pathway to Net-Zero)” என்பதாகும்.
‘தடையற்ற மின்சார விநியோகத்திற்காக சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை அதிகரித்தல்’ (Scaling up Solar and Wind for Round-the-Clock Power Supply) என்ற தலைப்பிலான சிறப்பு அமைச்சர்கள் அமர்வில் எரிசக்தி அமைச்சரான பொறியியலாளர் குமார ஜயக்கொடி உரையாற்றினார்.
அமைச்சர் IECE கண்காட்சியைப் பார்வையிட்டதுடன் அங்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியாவின் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மாநாட்டிற்கு இடையே, மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையில் உள்ள முக்கிய இந்திய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் (CXOs) நடைபெற்ற வட்ட மேசை கூட்டத்தில் அமைச்சர் குமார ஜயக்கொடி பங்கேற்றார். மேலும், தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்தின் (National Thermal Power Corporation - NTPC) தலைமை நிர்வாக இயக்குநரையும் சந்தித்தார்.
இந்தப் பயணத்தின்போது, அமைச்சர் குமார ஜயக்கொடி, மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் மனோகர் லால் கட்டார், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.
இந்தச் சந்திப்புகளில், பின்வரும் முக்கியத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன, குறிப்பாக மின்சார கட்டமைப்பு இணைப்புத் திட்டம் (Power Grid Interconnection), இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு எரிசக்தி ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல் போன்றவை விவாதிக்கப்பட்டன.
அத்துடன், எரிசக்தித் துறை அமைச்சர், ISO தரச்சான்றிதழ் பெற்ற, அதிநவீன 1.2 GW திறன் கொண்ட சூரிய மின்கல (Solar Module) உற்பத்தி வசதி ஒன்றையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்தச் சந்திப்புகளும் மாநாட்டில் பங்கேற்றதும், இரு நாடுகளுக்கும் இடையேயான எரிசக்தித் துறையின் ஒத்துழைப்பையும் எதிர்காலத் திட்டங்களையும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM