இங்கிலாந்தில் ஆங்கில வகுப்பில் எழுத்துப் பிழை காரணமாக மாடி வீடு (terraced) என்று எழுதுவதற்கு பதிலாக தீவிரவாத வீடு என்று எழுதிய முஸ்லிம் 10 வயது மாணவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். 

லாங்கஷர் நகரிலுள்ள ஒரு பள்ளியில் படிக்கும் அந்த மாணவர், ஆங்கில வகுப்பில் "டெர்ரேஸ்டு ஹவுஸ்´ (மாடி வீடு) என்பதற்குப் பதிலாக, "டெர்ரரிஸ்டு ஹவுஸ்´ (தீவிரவாத வீடு) என எழுத்துப் பிழையுடன் எழுதியதைத் தொடர்ந்து, பொலிஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. 

அதையடுத்து அந்த மாணவரின் வீட்டுக்குச் சென்று, அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார் அந்த வீட்டில் சந்தேகத்துக்கிடமான எந்த அம்சமும் இடம் பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் அந்த மாணவனை மிகவும் பாதித்துள்ளதாகவும், அவன் எதையுமே எழுத தயங்குவதாகவும் அவனது சகோதரி தெரிவித்துள்ளார்.