இன்று (ஒக்டோபர் 3) சர்வதேச மதுசார தடுப்பு தினம்
“எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சரியான முறையில் மதுசாரத்திற்கான வரியை அதிகரித்து எதிர்கால சந்ததியினர் மதுசாரத்திற்கு ஆளாகும் வீதத்தை குறைப்பதற்கும், மதுசார பாவனையினால் ஏற்படுகின்ற சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் அரசாங்கத்தின் விரைவான திட்டமொன்று தேவை.”
வருடாந்தம் மதுசார பாவனையினால் சுமார் 03 மில்லியன் பேர் அகால மரணமடைகின்றனர். உலகளாவிய ரீதியில் ஏற்படுகின்ற தடுக்கக்கூடிய 10 மரணங்களுள் 08 மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன.
மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான நான்கு பிரதான காரணங்களில் மதுசார பாவனை முன்னணி காரணியாகும்.
இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன, மதுசார பாவனையினால் தினமும் சுமார் 50 இலங்கையர்கள் அகால மரணமடைகிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 இலங்கையர்கள் அகால மரணமடைகிறார்கள். இருதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு மதுசார பாவனை ஒரு முக்கிய காரணியாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2022ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டு நிதியமான UNDP நடாத்திய ஆய்வின்படி, இலங்கையில் மதுசார பாவனைக்கான சுகாதார மற்றும் பொருளாதார செலவுகள் 237 பில்லியன் ரூபாயாக இருந்தன. அதே ஆண்டின் மதுசாரத்தினால் கிடைக்கப்பெற்ற கலால் வருமானம் ரூபா. 181.1 பில்லியன் மாத்திரமே ஆகும். (source: Investment Case for Alcohol Control in Sri Lanka 2023 – United Nations Development Programme)
மதுசார பாவனையானது ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றமையை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுவதோடு, இதனால், பல்வேறு சுகாதார மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கும் முகங்கொடுக்க நேரிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இழக்கப்படுகின்ற ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் வெற்றிடங்களையும் நிரப்புவதற்காக மதுசார நிறுவனங்கள் சிறுவர்களையும் இளைஞர்களையும் பிரதானமாக இலக்கு வைக்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.
2006ஆம் ஆண்டு 27ஆம் இலக்க மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபை சட்டத்தின் படி, எமது நாட்டில் மதுசாரம் மற்றும் புகைப்பொருட்களின் விளம்பரங்களை மேற்கொள்ள முடியாது. எனினும் குறிப்பிட்ட சட்டங்கள் மீறப்படும் வகையில் பல்வேறு விளம்பரங்கள் சிறுவர்களையும், இளைஞர்களையும் ஏமாற்றுவதற்காக மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மதுசார பாவனையைக் குறைப்பதன் மூலம் முழு நாட்டினதும் நல்வாழ்வு மேம்படுத்தப்படுவதோடு, சுகாதார செலவீனங்களைக் குறைத்து, குடும்பங்களுக்கிடையில் மகிழ்ச்சியை அதிகரிக்கவும் முடியும் என்பது திண்ணம்.
உலக சுகாதார அமைப்பின் கருத்திற்கமைய, மதுசாரத்திற்கான வரிவிதிப்பு மற்றும் விலை நிர்ணயக் கொள்கைகளை அறிவியல்பூர்வமாக அமுல்படுத்துவதானது ஒரு நாட்டின் மிகவும் பயனுள்ள மற்றும் செலவு குறைந்த மதுசாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றாகும். அதாவது, மதுசார வரியை அதிகரிப்பதன் மூலம் மதுசார பாவனை குறைவடைவதோடு அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெறும் கலால் வரி வருமானமும் அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம் : இலங்கை மது வரித் திணைக்களம்
இந்த விளக்கப்படம் 2020 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் மொத்த மதுசார வரி வருமானம் (பில்லியன் ரூபாய்களில்) மற்றும் மொத்த மதுசார உற்பத்தி (மில்லியன் லீற்றர் தூய மதுசாரம்) ஆகியவற்றின் விபரங்களை சித்திரிக்கிறது.
2022ஆம் ஆண்டிற்கு பின்னர் எமது நாட்டின் மொத்த மதுசார உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதோடு மதுசார வரி வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. இவை, மதுசாரம் மீதான வரி அதிகரிப்பின் மூலம் ஏற்பட்டுள்ள அனுகூலமான விளைவாகும். (மதுசாரம் மீதான வரி அதிகரிக்கப்பட்ட வீதம் : ஜூன் 2023இல் 20% அதிகரிப்பு, ஜனவரி 2024இல் 14% அதிகரிப்பு மற்றும் ஜனவரி 2025இல் 6% அதிகரிப்பு). 2022ஆம் ஆண்டில் மதுசார வரி வருமானம்; ரூபா 169.49 பில்லியனாக காணப்பட்டது. மேலும் 2024ஆம் ஆண்டில் மதுசார வரி வருமானம் ரூ. 223.25 பில்லியன்களாக அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலைமையானது மிகவும் சாதகமான சூழ்நிலையாகும். இதனால் மதுசார பாவனை குறைவடைந்துள்ளதோடு, அரசாங்கத்தின் வருமானமும் அதிகரித்துள்ளது.
மேலும், மதுசார பாவனை குறைவடைவதனால் பல்வேறு குறுகிய மற்றும் நீண்ட கால நன்மைகள் ஏற்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளுக்கமைய, ஒரு நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், மதுசார பாவனையைக் குறைப்பதற்கும், பாவனையால் ஏற்படுகின்ற விளைவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், மதுசார வரிக் கொள்கையை சரியான முறையில் அமுல்படுத்தி வரியை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவம் இவ்வுதாரணங்களிலிருந்து மிகவும் தெளிவடைகின்றது.
உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள தொற்றாத நோய்கள் குறித்த சமீபத்திய உலகளாவிய அறிக்கையின்படி (Saving lives spending less: The Global Investment case for noncommunicable diseases), மதுசாரம் மீதான வரியை அதிகரித்தல், மதுசார விளம்பரங்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் மதுசாரம் பெற்றுக்கொள்ளக்கூடிய தாராளத் தன்மையை குறைத்தல் ஆகிய மூன்று விடயங்களையும் ஒரு நாட்டில் அமுல்படுத்துவதன் மூலம் பெருந்தொகையான மரணங்களை தடுக்க முடியும் எனவும், பொருளாதார நட்டங்களைக் குறைத்துக்கொள்ள முடியும் இந்த சர்வதேச ஆய்வின் தரவுகளின்படி தெரியவந்துள்ளது. மேலும் மதுசாரக் கட்டுப்பாட்டிற்காக செலவிடப்படுகின்ற தொகையை போன்ற ஒன்பது மடங்கு சமூக மற்றும் பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்ட ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான பாதீட்டில் சரியான முறையில் கலால் வரியை அதிகரிப்பதற்கான வழிமுறையொன்றை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் எதிர்ப்பார்ப்பதோடு, பிள்ளைகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் மதுசாரத்திற்கு ஆளாகுவதைக் கட்டுப்படுத்துவதற்கும், மதுசார பாவனையால் ஏற்படுகின்ற சுகாதார, பொருளாதார விளைவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் கீழ்காணும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதானது மிகவும் அவசியமானதாகும் என்பதையும் வலியுருத்துகின்றது.
• ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப மதுசாரம் மீதான கலால் வரியை அதிகரிக்கும் ஒரு அறிவியல் வரிச்சுட்டெண்ணை அறிமுகப்படுத்தி அதனை செயற்படுத்துதல்.
•சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தேசிய மதுசாரத் தடுப்பு செயற்றிட்டத்தை செயற்படுத்துதல்.
• மதுசார பயன்பாட்டைக் குறைப்பதற்குஏற்கனவே உள்ள சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அமுல்படுத்துதல் மற்றும் 2019 இல் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகார சபை(NATA) சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை விரைவுபடுத்துதல்.
• தற்காலிக மதுசாரசாலை உரிமங்களை வழங்குவதையும், சுற்றுலாத்துறை என்ற போர்வையில் மதுசாரசாலை உரிமங்களை வழங்குவதையும் நிறுத்துதல்.
• சட்டவிரோத மதுசார உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்கு சட்ட அமுலாக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் இதற்கு பொறுப்பான நிறுவனங்களை வலுப்படுத்துதல்.
•மதுசார பாவனையிலிருந்து விடுதலையாகுவதற்கான ஆலோசனை, சிகிச்சை மற்றும் பிற சேவைகளை உருவாக்குதல் மற்றும் அவற்றை செயற்படுத்துதல்.
• தற்போது காணப்படுகின்ற பயனுள்ள மதுசார கட்டுப்பாட்டுக் கொள்கைகளை செயற்படுத்துவதற்கும், புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துவதனையும் பலவீனப்படுத்துவதற்கு பல்வேறு வழிகளிலும் மேற்கொள்ளப்படும் மதுசார நிறுவனங்களின்; தலையீடுகளைத் தடுத்தல்.
இம்முறை சர்வதேச மதுசார தடுப்பு தினத்தையொட்டி, புதிய அரசாங்கம் மேற்கூறிய பரிந்துரைகளை செற்படுத்துவதற்கான முறையான திட்டத்தை உருவாக்கும் என்றும்,எமது நாட்டில் மதுசாரம் தொடர்பான பிரச்சினைகளைக் குறைப்பதற்குவிரைந்து செயற்படும் எனவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) எதிர்பார்க்கிறது.
- மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM