இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலக வேண்டும் - பொதுஜன பெரமுன

01 Oct, 2025 | 03:39 PM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மக்கள் விடுதலை முன்னணியின் சட்ட பிரிவில் உறுப்பினராக பதவி வகித்ததாக அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

ஆணைக்குழுவின் சுயாதீனத்தை கருத்திற்கொண்டு பணிப்பாளர் நாயகம் உடன் பதவி விலக வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை ( செப்டெம்பர் 30) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது.

சட்டவாட்சியை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் எதிர்க்கட்சியினரை இலக்குப்படுத்தியுள்ளது. பொலிஸ் திணைக்களம் முறையற்றதாக செயற்படுகிறது. 

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் அரசியல் செயற்பாட்டாளராக இருந்த சானி அபேசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சார மேடைகளில் உரையாற்றிய ரவி செனவிரத்ன பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் தற்போது அரசியல் நோக்கத்துடன் செயற்படுகின்றனர். 

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மக்கள் விடுதலை முன்னணியின் சட்ட பிரிவில் உறுப்பினராக பதவி வகித்ததாக அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் நந்தன குணதிலக குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுயாதீன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் சுயாதீனத்தை கருத்திற் கொண்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க பதவி விலக வேண்டும். அல்லது இந்த குற்றச்சாட்டை முன்வைத்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் பொது மருத்துவமனையின் திடீர் விபத்து...

2026-09-16 15:55:10
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்சரிவு...

2026-09-16 15:40:46
news-image

கட்டுநாயக்கவில் உணவகத்தின் மேல் மாடியிலிருந்து விழுந்து...

2026-09-16 15:43:27
news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு...

2026-09-16 14:56:41
news-image

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-09-16 14:56:09
news-image

யாழ். களப்பில் 9,000 கடல் அட்டைகளுடன்...

2026-09-16 14:55:03
news-image

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உட்பட சட்டவிரோத செயற்பாடுகள்...

2026-09-16 14:52:16
news-image

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாமல்...

2026-09-16 14:14:14
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு...

2026-09-16 13:51:46
news-image

மட்டக்களப்பில் சிவஞானம், சுமந்திரன் உட்பட 4...

2026-09-16 12:46:18
news-image

அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை...

2026-09-16 12:49:25
news-image

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்காத...

2026-09-16 13:12:57