21ம் நூற்றாண்டுக்கான சிறந்த சமூகத்தை கட்டியெழுப்பும் பிரிவினராகவும்,எதிர்கால உலகினை மாற்றியமைக்கும் மாபெரும் சக்தி கல்வி என்ற நெல்சன் மண்டேலாவின் கூற்றுக்கிணங்க கல்வி கொண்டு உலகினை நல்லாட்சி கொண்டு ஆளப்பிறந்தவர்கள் இன்றைய சிறுவர்களே ஆவர். பொதுவாக உலக ஐக்கிய நாடுகள் சபையானது 18 வயதிற்குட்பட்ட அனைவரையும் சிறுவர்கள் என வரையறுத்துள்ளது. இவ்வாறு எல்லா மக்களின் பார்வையிலும் வியந்து பார்க்கப்பட வேண்டிய சிறுவர்களின் இளமைக்கால வாழ்க்கை ‘அன்பு’ எனும் ஆயுதம் கொண்டு சிறப்பாக அமையாத பொழுது, எதிர்கால உலகமே கேள்வியாகும் நிலையில் சிறுவர்களின் வாழ்வியல் முறைகளும், நம் எதிர்கால தலைமுறையினரின் உருவாக்கமும் எவ்வாறு அமையும் என்ற நிர்ப்பந்தத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நாளைய தலைவர்களாக வரவேண்டிய இன்றைய இளம் சிறார்களை அவர்களை சுற்றியுள்ள அனைவரும் தத்தமக்குரிய வகிபாகத்தை சரிவர நிறைவேற்றி ஊக்குவித்து சிறப்பாக வழிகாட்டினால் நிச்சயமாக எதிர்காலத்தில் சிறந்ததொரு சந்ததியை உயிரோட்டமான மாற்றத்துடன் உருவாக்க முடியும். அந்தவகையில் உலகசிறுவர் தினத்தை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டுக்கான உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு “சிறுவர் தின தேசிய வாரம்" செப்டெம்பர் 25ம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 01 பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இவர் வெளியிட்ட அறிக்கை அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,உலகப் போரின் போது ஏற்பட்ட சமூக மாற்றங்கள் காரணமாக சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.இதன்போது சிறுவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் துன்பங்களை கருத்தில் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை, சிறுவர்களுக்கென்று உரிமைகள் இருத்தல் வேண்டும் என தீர்மானித்தது.இதனால் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம் (CRC) ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
இலங்கை உள்ளிட்ட அதிகமான நாடுகள் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி “உலக சிறுவர் தினம்” கொண்டாடப்படுகின்றது.இவ்வாண்டு “அன்புடன் காப்போம் - உலகை வெல்வோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் சிறுவர் தொடர்பாக இயங்குகின்ற அனைத்து நிறுவனங்களும் இணைந்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நெறிப்படுத்தலில், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்ச்சித்திட்டக் கோவையை நடைமுறைப்படுத்தி உள்ளனர்.இலங்கையும் 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனத்தில் கையெழுத்திட்டது. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பில் வாதிட்டு வந்தது.ஒவ்வொரு நாட்டிலும் வாழும் சிறுவர்களின் வாழ்வு, பாதுகாப்பு, கல்வி, சுதந்திரம் தொடர்பில் பல செயற்திட்டங்களும், சட்ட செயற்பாடுகளும் நடைமுறையில் உள்ளன.
இவ்வாண்டு தேசிய சிறுவர் தின நிகழ்ச்சித்திட்டத்தில் 2025.10.01 அன்று, கௌரவ பிரதமர் தலைமையிலே அலரி மாளிகையில் சிறுவர்கள் 350 பேர் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் 700 பேர் வரையில் பங்கேற்கும் தேசிய விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உலக சிறுவர் தினத் திட்டமானது சிறுவர் உணர்திறன் மற்றும் சிறுவர் நட்புச் சமூகத்தை உருவாக்கவும், அவர்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நெறிப்படுத்துவதன் மூலம் எதிர்கால உலகை மாற்றியமைக்கவும் முடியும்.
இன்றைய சிறுவர்களே நாளை தலைவர்கள் என்பர். இன்றைய தலைவர்களின் தரமும், பங்களிப்பும், ஆளுமையும் தேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கின்றன.உலகில் வாழ்கின்ற மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களாக காணப்படுகின்றனர்.‘ஒரு நாட்டின் அபிவிருத்தியின் முதுகெலும்பு தொழிலாளர்கள்’ என்பர். யார் இந்த தொழிலாளர்கள்…?ஆம், இன்றைய சிறுவர்களே நாளைய நாட்டின் சமூகத்தை கட்டி எழுப்புகின்ற மாபெரும் சக்தி படைத்தவர்கள். அன்புள்ளம் கொண்ட குடும்பம், பாடசாலை, சமூகம் அமையாவிடின் எதிர்கான உலகின் நிலவரம் என்ன..? பெரியோர்களின் சிறந்த வழிகாட்டலும், இம்மூன்றினதும் ஒத்துழைப்பு, ஆதரவு, நல்லுறவு நிச்சயம் சிறப்பாக அமைந்தால் எதிர்காலத்தில் நல்ல பல தலைவர்களை உருவாக்கும் வகையில்,1948முதல் இன்றுவரையில் எதிர்பார்க்கப்படும் தேசிய குறிக்கோளான “சமூகத்திற்கான சிறந்த நற்பிரசைகளின் உருவாக்கம்” அடையப்படும்.
1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உலகெங்கும் உள்ள 18 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு இடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது. சிறுவர் உரிமைகள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய உரிமைகளாக பின்வருவனவற்றை குறி;ப்பிட முடியும். அதற்கிணங்க வாழ்வதற்கும் முன்னேறுவதற்குமான உரிமை,பிறப்பின் போது பெயர் ஒன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக் கொள்ளும் உரிமை,பெற்றோரை தெரிந்து கொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பை பெற்றுக் கொள்வதற்குமான உரிமை,பெற்றோரிடமிருந்து தம்மை தனிமைப்படுத்தபடாது இருப்பதற்கான உரிமை,தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை,சிந்திப்பதற்கும், மனசாட்சிப்படி நடப்பதற்கும், சமயமொன்றை பின்பற்றுவதற்குமான உரிமை,சமூக உரிமை, தனியுரிமை, சுகாதார வசதிகள் பெறும் உரிமை என்பன மிக முக்கியமானதாகும்.
மேலும், ஒவ்வொரு சிறுவர்களும் தமக்கான போதிய கல்வியை பெறும் உரிமை,பொருளாதார சுண்டல்களிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை,பாலியல் வல்லுறவுகளில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை,சித்திரவதை, கொடூரமாக நடத்துதல் போன்ற தண்டனைகளில் இருந்து தவிர்த்துக்கொள்ளும் உரிமை என்பன சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் முக்கியமானதாக அiமைகின்றன. இது போன்ற பல உரிமைகள் சிறுவர்களை பாதுகாக்கவும், சுதந்திரமாக வாழ்வதற்கும், எதிர்காலத்தை மாற்றியமைக்கும் ஆரம்ப செயற்பாட்டுக்கான உறுதுணையாக அமைகின்றன.
தொழிநுட்ப உலகுடன் போராட வேண்டிய நிர்ப்பந்த சூழலில் சிறுவர்கள் எதிர்நோக்கும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. தற்காலத்து சிறுவர்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். அந்த வகையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளாக மோசமான வார்த்தை பிரயோகம், சிறுவர்களை புறக்கணித்தல்,போதைப் பொருள் கடத்தலுக்காக இவர்களை பாவித்தல், இளம் வயது திருமணம்,சிறுவர் கடத்தி உடல் உறுப்புகளை விற்றல், கொலை,பாலியல் துஸ்பிரயோகம், யுத்தத்தினால் பாதிப்படைதல், சிறுவர் உழைப்பு, சித்திரவதை, விபச்சாரத்துக்கு அமர்த்தப்படுதல் என பல வன்முறைகள் ஒவ்வொரு குடும்பம் முதல் சமூகம் வரையில் அதாவது இன்று உலக அரங்கில் சிறுவர்களுக்கு எதிரான அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.
சிறுவர்களை அன்பால் அரவணைத்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடும்பம், பாடசாலை, சமூகம் ஆகிய மூன்று தரப்பினதும் முக்கிய கடமையாகும். சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை குறைத்து அவர்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு சட்டங்கள், சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள், சிறுவர் நலம்புரி சேவை மையங்கள் என்பன உருவாக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக தேசிய பாதுகாப்பு அதிகார சபை,மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு,சர்வதேச சிறுவர் நிதியம், SAVE THE CHILDREN, UNICEF, UNESCO என பல அமைப்புக்களும், துணை நிறுவனங்களும் காவல்துறை, நீதிமன்றம், மன்னிப்பு சபை, 1929 ஆகிய பாதுகாப்பு முகவர் அமைப்புக்களுடன் இணைந்து தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.
மேலும் ஒவ்வொரு பெற்றோர்களும் தமது குழந்தைகளுக்கு நிம்மதியானதும் சுதந்திரமானதுமான அன்பு, அரவணைப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் சூழலை அத்தியாவசியமாகதேவையாக ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். சிறுவர்களும், பெரியோர்களும் முக்கிய இரு கண்களாக போற்றப்பட வேண்டும் என்ற நோக்கிலும்,“இன்றைய சிறுவர்களே நாளைய பெரியவர்கள்” என்ற கணிப்பில் இருதினமும் ஒரு தினமாக கொண்டாடப்படுகிறது. உலகின் நன்மை தீமைகளை சரிவர எடுத்துக் கூறி சரியான முறையில் ஒவ்வொரு பிள்ளைகளின் வாழ்வு, கல்வி, சுகாதாரம், சுதந்திரம், பாதுகாப்பு, அரவணைப்பு ஆகியவற்றில் அன்பு கொண்டு உலகம் படைக்கும் வகையில்ஒவ்வொருவரும் தீலிரமாக செயற்படும் வண்ணம், தம் குழந்தைகளை சுயநலமில்லாத பொதுநலம் பேணும் வகையில் வழிப்படுத்துவது அவர்களின் வளமான எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டுவதற்கான சிறந்த பணியாகும் என்றால் அக்கூற்று பொய்க்காது.
- கந்தசாமி அபிலாஷ்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM