உலக சிறுவர் தினம்
சிறு இதயம் சூரியன் போல,
சிரிப்பால் உலகை சூடாக்கும்.
மழைத்துளி போல் தூய்மையானது,
சிறுவர் மனம் – மனவியல் அற்புதம்.
ஆர்வம் கொண்ட கண்கள் வழியாக,
அறிவின் விதை முளைக்கிறது.
விளையாட்டில் கற்ற பாடம்,
வாழ்க்கையை வழிநடத்துகிறது.
உலக சிறுவர் தினம்
சொல்லும் செய்தி ஒன்றே –
"குழந்தை சிந்தை காக்கும் பணி,
ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பு!"
அவர்களின் உரிமை சுருங்கக் கூடாது,
அன்பும் பாதுகாப்பும் குறையக் கூடாது.
மனநலன் மலர வழி செய்யும்,
கவனமும் பரிவும் அவசியம்.
பசி, பயம், போர், வன்முறை –
இவைகள் தொலைந்த உலகம்தான் வேண்டும்.
அமைதி, சமத்துவம், கல்வி –
இவைகள் நிறைந்த உலகம் தான் சிறுவர்களின் கனவு.
அவர்கள் சிந்தையில் ஒளிரும் கனவுகள்,
நாளைய நாளை மாற்றும் சக்தி.
நாம் விதைக்கும் நம்பிக்கையின் விதை,
அவர்களின் சிரிப்பில் மலர்கிறது.
உலக சிறுவர் தினம் –
அன்பின் மொழி, நம்பிக்கையின் ஒளி,
சமூக நீதி, சமத்துவத்தின் குரல் –
சிறுவர் சிரிப்பால் நிறைந்த நம் எதிர்காலம்
- நடராசா கோபிராம்,
உளவியல் சிறப்புக் கலை மாணவன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM