தண்டுவட சீரமைப்பு சிகிச்சையாக பிரபலமடைந்து வரும் டார்ன் தெரபி

Published By: Vishnu

01 Oct, 2025 | 03:17 AM
image

இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் கைபேசி, மடிக்கணினி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களின் பாவனையை தொடர்ந்து அதிகரித்துக் கொள்கிறார்கள். நாளாந்தம் குறைந்தபட்சம் 6 மணி தியாலம் வரை எம்முடைய உடலின் இயல்பு நிலையிலிருந்து மீறி குறிப்பாக கழுத்தை குனிந்து கைபேசியை பார்வையிடுகிறோம். கைபேசியில் உள்ள டிஜிற்றல் திரையை பார்வையிடுகிறோம். கழுத்தைக் குனிந்து தங்களின் வாழ்வாதாரமான மடிக்கணினியை இயக்குவது அல்லது அதில் தட்டச்சு செய்வது போன்ற பணிகளையும் மேற்கொள்கிறோம். இதன் காரணமாக நாளடைவில் உங்களுடைய கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக உங்களுடைய தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது.

வேறு சிலருக்கு அவர்களுடைய பணியாற்றும் உடல் மொழியில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதால்... குறிப்பாக இடுப்பு பகுதியில் வலி உண்டாகிறது. இதற்காக அவர்கள் வைத்தியரிடம் சென்று சிகிச்சை மேற்கொள்ளும் போது அவர்கள் வலி நிவாரண சிகிச்சையுடன் இயன்முறை சிகிச்சையை பரிந்துரைக்கிறார்கள். இத்தகைய சிகிச்சையுடன் தற்போது டார்ன் தெரபி எனப்படும் எலும்பு மற்றும் தண்டுவட பகுதியை சீரமைக்கும் தொடு சிகிச்சையை இணைத்து மேற்கொண்டால் விரைவான நிவாரணம் கிடைக்கும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள். 

இந்த டார்ன் தெரபியை மூலம் கழுத்து எலும்பு பாதிக்கப்பட்டு கூன் விழுந்திருந்தாலும்... முதுமையின் காரணமாக கூன் விழுந்திருந்தாலும்.... முதுமை மற்றும் உடல் எடை அதிகம் காரணமாக உங்களுடைய நடையில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும்.... இதனை முறையான மற்றும் முழுமையான டார்ன் தெரபியை மேற்கொள்வதன் மூலம் நிவாரணத்தைப் பெறலாம்.

மேலும் இத்தகைய தெரபி மூலம் பெண்மணிகள் பிரசவத்தின் போது முதுகெலும்பில் செலுத்திக்கொள்ளும் ஊசி காரணமாக ஏற்படும் பக்க விளைவுகள் ... துவி சக்கர வாகனத்தை நாளாந்தம் இயக்குவதால் ஏற்படும் முதுகெலும்பு பாதிப்பு... முக பக்கவாதம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் முகத்தின் பகுதிகளையும் சீரமைப்பதற்கும் இத்தகைய சிகிச்சையை பிரத்யேக வைத்தியர்களிடம் தொடர் அமர்வின் மூலம் மேற்கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.

வைத்தியர் ஜெய்கணேஷ், 

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-08-13 18:12:25
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எக்ஸ்ட்ராகார்போரியல்...

2026-08-13 18:14:22
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-08-12 16:05:53
news-image

சர்கோயிடோசிஸ் எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-08-11 16:51:59
news-image

டகோட்சுபோ கார்டியோமயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய...

2026-08-10 15:50:50
news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41
news-image

தசை இறுக்கத்திற்கு நிவாரணமளிக்கும் பனிக்கட்டி குளியல்...

2026-08-04 15:26:44
news-image

ப்ரௌன் ஃபேட் எனும் பழுப்பு கொழுப்பு...

2026-08-01 17:00:28
news-image

குரல் வளை முடிச்சு அல்லது குரல்...

2026-07-31 16:37:19
news-image

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை :...

2026-07-31 14:15:13