செய்வினை தோஷத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பிரத்யேக குறிப்பு

Published By: Vishnu

30 Sep, 2025 | 08:36 PM
image

எம்முடைய குடும்ப உறுப்பினர்களின் பலரும் வழக்கமான உற்சாகத்தை துறந்து, எந்தவித ஆர்வமும் இல்லாமல் நாளாந்த கடமைகளை மட்டுமே செய்யத் தொடங்கினால்.. அவர்கள் கண்ணுக்குப் புலப்படாத செய்வினை தோசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை துல்லியமாக அவதானிக்கலாம்.  இதனை பாதிக்கப்பட்ட நபர் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும். ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும்... இதுதான் எதார்த்தமான உண்மை. இந்நிலையில் இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்வதற்கான சூட்சம குறிப்புகளை எம்முடைய முன்னோர்கள் வழங்கி உள்ளனர்.

நீங்கள் இதுபோன்ற தருணங்களில் உங்களது வீடு மற்றும் பூஜை அறையில் அணையா தீபத்தை ஏற்றுங்கள்.  அதாவது நாளாந்தம் குறைந்த பட்சம் 20 மணி நேரம் வரை சுடர் விட்டு எரியும் தீபத்தையாவது ஏற்றிட வேண்டும். தீபம் ஏற்றப்படும் வீட்டில் அதிலிருந்து பரவும் ஒளியானது... வீட்டில் செய்வினை தோசத்தால் பரவி இருக்கும் எதிர்மறை ஆற்றலை அகற்றி விடும்.

இதுபோன்ற தருணங்களில் ஆன்மீக பொருட்கள் விற்பனை நிலையத்திலும் அல்லது ஆன்மீகம் சார்ந்த நிலையங்களிலும் செறிவூட்டப்பட்ட சுதர்சன சக்கரம்- ஸ்ரீ சக்கரம் - அடங்கிய எந்திரங்களை வாங்கி வந்து, வீட்டில் உள்ள பூஜை அறையில் இடம்பெறச் செய்து, அதனை வழிபட தொடங்கலாம்.

மஞ்சள் தூள் கலந்த நீரினை வியாழக்கிழமைகளில் வீடு முழுவதும் தெளித்தாலும் எதிர்மறை ஆற்றல் மற்றும் செய்வினை தோசம் அண்டாது. இதுபோன்ற தருணங்களில் உக்கிர தெய்வங்களான துர்க்கை அம்மன், காளியம்மன் போன்ற சக்தி வாய்ந்த பெண் தெய்வங்களை மனதில் நிறுத்தி அவர்களின் பாதம் பணிந்து இந்த மஞ்சள் நீரை தெளித்தாலும் பலன் விரைவில் கிடைக்கும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கர்மா தொடர்பான கெடுபலன் குறைவதற்கான எளிய...

2026-07-11 16:58:36
news-image

தடையற்ற வருவாய் கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-07-10 15:21:24
news-image

நினைத்ததை சாதிக்கும் வல்லமை வழங்கும் சூட்சம...

2026-07-09 18:36:55
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2026-07-08 14:58:00
news-image

வாராகி அம்மனுக்குரிய பிரத்யேக தீப வழிபாடு

2026-07-07 17:13:45
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-07-06 15:19:29
news-image

வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட மேற்கொள்ள வேண்டிய...

2026-07-04 13:42:37
news-image

திருமண தடையை நீக்கும் பிரத்யேக வழிமுறை

2026-07-03 16:32:29
news-image

குரு பகவானின் தோஷம் நீக்குவதற்கான எளிய...

2026-07-02 17:50:01
news-image

பிறந்த பிள்ளைக்கு ஜாதகம் எப்போது எழுத...

2026-07-01 16:04:37
news-image

தொழிலில் முன்னேற்றம் கிடைப்பதற்கான பிரத்யேக வழிமுறை!

2026-06-30 17:14:14
news-image

ஜுலை மாத ராசி பலன்கள் -...

2026-06-30 15:40:37