இலங்கையின் முன்னணி தகவல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குனரான ஆசிய பசிபிக் டெக்னாலஜி சிஸ்டம்ஸ், உலகளாவிய ரீதியில் 30ற்கும் மேற்பட்ட நாடுகளில் ப்பின்டெக் பவர்ஹவுசினை கொண்டிருக்கும் கிராஃப்ட் சிலிக்கானுடன் பங்காளியாக இணைந்து அடுத்த தலைமுறைக்கான கோர் வங்கி முறையினை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ் இணைப்பானது, கிராஃப்ட் சிலிக்கானின் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஃபின்டெக் திறன்களுடன் புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் APTS இன் வலுவான உள்நாட்டு நிபுணத்துவத்தை இணைத்து, இலங்கையின் வங்கி மற்றும் நிதித் துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட விதத்திலான ஒரு சக்திவாய்ந்த தளத்தை உருவாக்குகிறது.
இவ் முக்கியதுவமிக்க நிகழ்வானது செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி 2025இன்று சங்கிரிலால் ஹோட்டலில் Reimaging Banking – The Core Awakens” எனும் கருபொருளின் கீழ் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வு நாட்டின் டிஜிட்டல் பரிமாண பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் ஏற்படுத்தியுள்ளது, வங்கி மற்றும் நிதித் துறையைச் சேர்ந்த தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைத்து இந்நிகழ்வு நடைபெற்றது.
கோர் வங்கியியல் முறை (CBS) வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்; அன்றாட செயல்பாடுகளை திறம்பட நிர்வகிக்க உதவும் மைய மென்பொருள் தளமாகும். இது நிதி முகாமைத்துவம், வைப்புத்தொகை, கடன்கள், கொடுப்பனவுகள் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பாடல் முகாமைத்துவம் போன்ற முக்கிய வங்கி செயல்பாடுகளை ஒரு ஒருங்கிணைந்த தளத்தில்; ஒன்றினைக்கின்றது. ஒரு நவீன CBS வங்கி; பல வழிகளில்; தடையற்ற, நிகழ்நேர மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்க அனுமதிக்கிறது, இது நிறுவனங்களின் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்தவும், தொடர் கண்காணிப்பிற்கும்;, டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்தவும் உதவுகிறது.
குறிப்பாக பல்வேறுபட்ட தொழிற்துறைகளில் வணிகங்களின் டிஜிடல் மாற்றத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக காணப்படுகின்றனர். நிதி தொழில்நுட்பத்தில் APTS வலுவான கவனம் செலுத்தி வருகின்றது மேலும், நிறுவனங்களை புதுமைப்படுத்தவும், போட்டித்தன்மையுடன் இருக்கவும், டிஜிட்டல் சகாப்தத்தில் நிலையான வளர்ச்சியை அடையவும் வலுவளிக்கும் அதிநவீன தீர்வுகளை வழங்குகிறது' என நிறுவனரான திரு.நாமல் சேனாரட்ண தெரிவித்தார்.
ஆபிரிக்கா, ஆசியா அதற்கும் அப்பால் 30ற்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் சர்வதேச ப்பின்டெக் நிறுவனமான கிராஃப்ட் சிலிக்கான் தனது தலைமை நிறுவனத்தை கென்யா, நைரோபியில் கொண்டுள்ளது. புதுமைநிறைந்த வங்கியியல், நுண்நிதி மற்றும் டிஜிட்டல் தீர்வுகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான கிராஃப்ட் சிலிக்கான், சேவை வழங்கலை மேம்படுத்தவும், உள்ளீட்டினை ஊக்குவிக்கவும், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் துறையில் போட்டித்தன்மையுடன் இருக்கவும் நிதி நிறுவனங்களுக்கு வலிமை அளிக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM