புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக ஜனாதிபதி நிதியத்தின் மூலம் மாதாந்த கல்வி உதவி – அமைச்சர் அருண் ஹேமச்சந்திர

29 Sep, 2025 | 05:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்காக  மாதாந்தம் நிதி உதவி  வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கும் மாணவர் உதவித் தொகை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களின் ஒரு பகுதியாகவே ஜனாதிபதி நிதியம் ஊடாக  புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மாணவர் உதவித்தொகை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறோம். ஜனாதிபதி நிதியம் என்பது மக்களுக்கு உரித்தாகவேண்டிய ஒன்றாகும். அது வரப்பிரசாதம் அல்ல.

தற்போது அது முறையாக மக்களின் உரிமையாக மாற்றப்பட்டு வருவதை நாங்கள் காணிகிறோம். என்றாலும் கடந்த காலங்களில் இந்த ஜனாதிபதி நிதியம் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பாராளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேசப்பட்டது.

தற்போது அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. மக்கள் மயமான ஆட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருப்பதை நாங்கள் காண்கிறோம்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தரம், உயர்தரம் மற்றும் பல்கலைக்கழக கல்வி அல்லது தொழில் பயிற்சி பெறும் பிள்ளைகளுக்கு மாதாந்தம் 5000, 7000 மற்றும் 8000 ரூபா போன்ற நிதி உதவி பெற்றுக்கொடுப்பது மிகவும் முக்கிய விடயமாகும். 

குறிப்பாக வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கு சென்று, அந்த தொழில் செய்யும் இடத்தில் பல்வேறு பிரச்சினைகள், நெருக்கடிகள், முறையாக சம்பளம் கிடைப்பதில்லை என்றால், அந்த குடும்பத்துக்கு பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படுகிறது.

அந்த குடும்பம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்த குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி வீழ்ச்சியடைய ஒருபாேதும் இடமளிக்க முடியாது.

ஏதாவது அனர்த்தம், விபத்து அல்லது சிறைப்படுத்தல் ஏற்பட முடியும். அவ்வாறான பல்வேறு சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் கல்வி உரிமை மீறப்பட்ட சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

என்றாலும் அந்த நிலைமைகள் மாற்றப்பட வேண்டும். அதற்கு தேவையான சூழல் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வருடம் ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து இது செயற்படுகிறது. 

யாராவது ஒரு நபர் இந்த வருடம் ஜனவரி 1ஆம் திகதிக்கு பின்னர் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகமகொடுத்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

இந்த நாட்டுக்கு அதிகமாக வெளிநாட்டு செலாவணியை எடுத்துக்கொண்டுவருவது புலம்பெயர் தொழிலாளர்களாகும். அதனால் அவர்களின் பிள்ளைகளுக்கு மாணவர் உதவித் தொகை வழங்குவதென்பது மிகவும் பெறுமதியான விடயமாகும். அதுதொடர்பில் நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி உள்ளிட்ட அனைவருக்கும் மிகவும் நன்றி என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரூ.24 பில்லியன் நட்டத்தில் இருந்து இலாப...

2026-09-09 12:25:53
news-image

20 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மலையக மக்களின்...

2026-09-09 17:35:50
news-image

மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்...

2026-09-09 12:45:30
news-image

மலையக மக்களின் வீடு, காணி உள்ளிட்ட...

2026-09-09 17:31:26
news-image

ராஜபக்‌ஷ குடும்ப அரசியலுக்கு இனி மக்கள்...

2026-09-09 13:44:30
news-image

ராஜ்நாத் சிங் இலங்கை விஜயத்தில் கைச்சாத்திடப்பட்ட...

2026-09-09 17:30:07
news-image

மன்னார்–இராமேஸ்வரம் நேரடி பயணிகள் கப்பல் சேவையை...

2026-09-09 14:12:24
news-image

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள ஈரான் கப்பல்...

2026-09-09 17:02:51
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அரசாங்கத்தின் சர்வதேச...

2026-09-09 14:21:59
news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24