சொந்தமாக காணி வாங்குவதற்கான சூட்சம குறிப்பு..!?

29 Sep, 2025 | 03:56 PM
image

இன்றைய திகதியில் மட்டுமல்லாமல் பாரம்பரியமாக எம்முடைய அடையாளம் என்பது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலவியலுடன் தொடர்பு கொண்டு உள்ளது. அதாவது சொந்தமாக காணி வைத்திருப்பது தான் வாழ்வின் ஒப்பற்ற அடையாளம்.

மனித வாழ்க்கையில் உயர்ந்த பற்றுக்கோடு என்னவெனில் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் சொந்தமாக காணி வாங்குவதற்கு பலரால் சிந்திக்கவும் முடிவதில்லை.

ஏனென்றால் அவர்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரம் ஒரு நிபந்தனைக்கு உட்பட்டே இருக்கும். இந்நிலையில் சொந்தமாக காணி வாங்க வேண்டும் என்றாலோ அல்லது அதற்கான தன வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றாலோ எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள். இதனை பின்பற்றினால் சொந்த காணி கனவு சாத்தியமாகும்.

இதற்கு தேவையான பொருட்கள் : சதுர வடிவிலான வெண்ணிற துணி, பாதாம் பருப்பு, பசு நெய், பச்சை கற்பூரம் தீப்பெட்டி.

மாதந்தோறும் வரும் பௌர்ணமி திதி நாளன்று ஒரு வெண்மை வண்ண சதுர வடிவத்திலான துணியை எடுத்து அதில் மூன்று பாதாம் பருப்புகளை வைத்து முடிச்சிட வேண்டும்.

இந்த முடிச்சினை உங்களது பூஜை அறை அல்லது பண பெட்டி அல்லது உங்களுடைய விற்பனை நிலையத்தின் பணப்பெட்டி ஆகியவற்றில் வைத்து விடுங்கள்.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இந்த முடிச்சினை புதிதாக வைத்திட வேண்டும். ஓராண்டு நிறைவதற்குள்ளாகவே உங்களுடைய  சேமிப்பு சிறிதளவு உயர்ந்திருப்பதை அனுபவத்தில் காணலாம்.

அதே தருணத்தில் பௌர்ணமி நாளன்று அல்லது நாளாந்தமோ அல்லது வெள்ளிக்கிழமைகளிலோ ஒரு ஆறு பாதாம் பருப்பு.. அதில் சிறிதளவு நெய் விட்டு... அதனை பச்சை கற்பூரத்தால் கொளுத்திட வேண்டும். இந்த தீபம் எரியும்போது... எரிந்து நிறைவடையும் போது... அதிலிருந்து வெளியாகும் பாதாம் பருப்பு - பசு நெய் + பச்சை கற்பூரத்தின் வாசம்.... உங்களது வீட்டில் எதிர்மறையான ஆற்றல்கள் இருந்தால் அதனை அகற்றி, தன வரவிற்கான நேர் நிலையான ஆற்றலை சூட்சமமாக உண்டாக்கும். இந்த இரண்டு சூட்சும குறிப்புகளையும் நீங்கள் தொடர்ந்து ஓராண்டு வரை மேற்கொண்டால்... உங்களுடைய காணி வாங்கும் கனவு நனவாகும்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உங்கள் ராசியும் அதிர்ஷ்ட வண்ணமும்

2026-08-15 17:08:56
news-image

செவ்வாய் தோஷம் நீங்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-14 14:25:37
news-image

பாக்யத்தை அருளும் பூஜையறை

2026-08-12 13:51:55
news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31
news-image

தொழிலில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான சூட்சம...

2026-08-01 17:06:21
news-image

கர்ம வினைகளின் தாக்கத்தை அளிப்பதற்கான பிரத்யேக...

2026-07-31 17:00:24