தெற்கில் மாண­வர்கள், வைத்­தி­யர்கள், பேரா­சி­ரி­யர்கள், பொது அமைப்­புகள் மற்றும் தொழிற்­சங்­கங்­களின் போராட்­டங்­களை முடக்­கு­வ­தற்கு பொலி­ஸாரும் படைப்­பி­ரி­வி­னரும் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். எனினும் வடக்கில் நிலைமை வேறு­வ­கையில் உள்­ளது. அங்கு பொலிஸார் மீதும் படைப்­பி­ரிவு மீதும் தாக்­குதல் நடத்­தப்­ப­டு­கி­றது.  இவ்­வா­றான நிலையில் சர்­வ­தே­சத்தின் தேவை­க­ளுக்­காக பயங்­க­ர­வாதச் தடைச்­சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான முயற்­சி­களும் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன என்று   முன்னாள் அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்­பி­லுள்ள ஸ்ரீவ­ஜி­ரா­ஷர்ம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வத்தார்.  

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­பட்­டுள்ள அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது பத­வி­யி­லி­ருந்து விலக வேண்டும். அதில் எவ­ருக்கும் மாற்­றுக்­க­ருத்து இருக்க முடி­யாது. எனினும் அமைச்சர் ரவி கரு­ணா­ந­யக்­க­விற்கு மாத்­திரம் தண்­டனை வழங்­கி­விட்டு நல்­லாட்சி அர­சாங்கம் அதி­லி­ருந்து தப்­பித்­துக்­கொள்­வ­தற்கு முயற்­சிக்­கு­மாக இருந்தால் அதற்கு கூட்டு எதிர்க்­கட்சி இட­ம­ளிக்­கப்­போ­வ­து­மில்லை. 

ஏனெனில் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி மூலம் பெறப்­பட்ட நிதி  பாரா­ளு­மன்றத் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கும் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆக­வேதான் மத்­திய வங்கி பிணை­முறி மோச­டியை மறைப்­ப­தற்கு அர­சாங்கம் பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­தது.

தற்­போது நாட்டில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சியை நடத்­து­வ­தாகத் தெரி­ய­வில்லை. 

ஏனெனில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திக­தி­வ­ரையில் அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­ப­ட­மாட்­டாது என ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார். எனினும் “ஜனா­தி­பதி என்ன சொன்­னாலும் பர­வா­யில்லை. தாம் குறித்த உடன்­ப­டிக்­கை­யினைக் கைச்­சாத்­தி­டுவோம் என்று  பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருந்தார். அதேபோல் உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது.

தெற்கில் மாண­வர்கள், பொது அமைப்­புகள் மற்றும் தொழிற்­சங்­கங்­களின் போராட்டங்­களை முடக்­கு­வ­தற்கு பொலி­ஸாரும் படைப்­பி­ரி­வி­னரும் ஈடுபடுத் தப்படுகின்றனர். 

எனினும் வடக்கில் நிலமை வேறு. அங்கு பொலிஸார் மீதும் படைப்பிரிவு மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இவ்வா றான நிலையில் சர்வதேசத் தின் தேவைகளுக்காக பயங் கர வாதச் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளும் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன என்றார்.