கிழக்கு மாகாணத்தில் பல சுகாதார அபிவிருத்தி திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக சுகாதார மற்றும் வெகுசனஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சமீபத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.
அம்பாறை வைத்தியசாலையின் நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோர் பிரிவு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கும் உடல் மற்றும் உள மறுவாழ்வு மையத்தை அமைச்சர் பார்வையிட்டார்.
இந்த உடல் மற்றும் மன மறுவாழ்வு மையமானது பக்கவாதம், விபத்துக்கள், அறுவை சிகிச்சைகள், தொற்றுகள் மற்றும் மூட்டுநோய்கள், தசை அல்லது நரம்பு சம்பந்தமான மற்றும் சிறப்புத்தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை சேவைகளை வழங்குகிறது.
புனர்வாழ்வு மையத்தால் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் பௌதீக வளங்கள் அறிந்து கொண்ட அமைச்சர் அமைச்சர், உடல் மற்றும் மன மறுவாழ்வு மையத்தின் பிசியோதெரபிபிரிவு, செயற்கை உறுப்புகள் மற்றும் உதவி சாதனங்கள் பிரிவு, நோயாளி சிகிச்சை வார்டுகள் மற்றும் குழந்தை சிகிச்சைவார்டு ஆகியவற்றையும் ஆய்வுசெய்தார்.
பின்னர், உடல் மற்றும் மன மறுவாழ்வு மையத்தின் அடிப்படைத்தேவைகள் குறித்து அதன் பொறுப்பான மருத்துவ அதிகாரி தினுஷாசமரகோனுடன் கலந்துரையாடினார்.
ஒவ்வொரு பிரிவுக்கும் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், உபகரணங்களில் தட்டுபாடு நிலவுவதாகவும் அத்துடன் இரண்டு வார்டுகளின் நோயாளர்களின் படுக்கை கட்டில் சம்பந்தமாக போதுமானதாக இல்லை.
தொழிற் கல்வி பயிற்சி பிரிவு இல்லாததும் ஒரு பிரச்சனையாகும், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கரநாற்காலி பயிற்சி மற்றும் நடைபயிற்சிக்கான சிறப்பு இடங்கள் நிர்மானிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நடவடிக்கைகளை விரைவில் நிறைவுசெய்யவேண்டிய அவசியம்.
மேலும், குளியலறைகள், கழிப்பறைகள் மற்றும் சமையலறைகள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏற்றவாறு புதுப்பிக்கப்படவேண்டும் என்றும், செயற்கைமூட்டு உற்பத்திப்பிரிவில் இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் இல்லாததால் இந்த செயல்முறை தற்போது மேற்கொள்ளப்படவில்லை போன்ற விடங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்திய சுகாதார மற்றும் வெகுஜனஊடக அமைச்சர் நளிந்தஜயதிஸ்ஸ, உடல் மற்றும் மன மறுவாழ்வு மையத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் அதேவேளையில், நோயாளி சிகிச்சைசேவைகள் மற்றும் எதிர்காலமேம்பாட்டு நடவடிக்கைகளைத்தொடர்வதற்காக ரூ.50 மில்லியன் நிதிஒதுக்கீடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த உடல் மற்றும் மன மறுவாழ்வு மையம் 2012-2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அம்பாறை பொதுமருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளராக இருந்த டாக்டர் லங்காதிலகவின் வழிகாட்டலில் நிறுவப்பட்டது, மேலும் சிகிச்சைகள் 2015 ஆண்டளவில் தொடங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிராமப்புறவளர்ச்சி மற்றும் சமூகபாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் துணை அமைச்சர் எல்.ஜி. வசந்தபியதிஸ்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்வசீன், கிழக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பி.எஸ். எமி விமலரத்ன, அம்பாறை பொதுமருத்துவமனையின் பணிப்பாளர், சிறப்பு வைத்தியர் ரங்கசந்திரசேன மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் கலந்துகொண்டனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM