நிலக்கரி கொள்முதல் வழிகாட்டல் மீறப்பட்டதா? – புபுது ஜயகொடை சந்தேகம்

Published By: Vishnu

29 Sep, 2025 | 03:46 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மின் உற்பத்திக்கான நிலக்கறி கேள்விக்கோரலின்போது  அரசாங்கம் பின்பற்றிய தகுதிகளை பார்க்கும்போது, குறித்த ஒரு  நிறுவனத்துக்கு வழங்கும் நோக்கில் கொள்முதல் வழிகாட்டலை மீறியுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது என முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மின் உற்பத்திக்கான நிலக்கறி விநியோக கேள்விக்கோரல் கடந்த  15ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தது. அந்த கேள்விக்கோரலின் ஆகக்குறைந்த கேள்வித்தொகையை சமர்ப்பித்த குறித்த  நிறுவனத்துக்கு அது உரித்தானது. என்றாலும் நிலக்கறி விநியோக கேள்விக்கோரலின் போது, பின்பற்றிய தகுதிகளை பார்க்கும்போது, இந்த கேள்விக்கோரல் குறித்த அந்த நிறுவனத்துக்கு வழங்கும் நோக்கிலே கொள்முதல் வழிகாட்டலை மீறியுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

அத்துடன் குறித்த நிறுவனத்தின் பெயருடன் மோசடி குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.. இந்த நிறுவனம் 2014இல் சதொச நிறுவனத்துக்கு  30ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசி விநியோகத்தின்போது, அரச கொள்முதல்  வழிகாட்டலை மீறியுள்ளதாக 2016,9,20ஆம் திகதி அரச தொழில் முயற்சியாளர் செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் 2022இல் புது டில்லியில் மதுவரி மோசடி ஊடாக நாணய சுத்திகரிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார். நிறுவனத்தின் உரிமையாளருக்கு மேலதிகமாக குறித்த நிறுவனத்தின் உள்நாட்டு பிரதிநிதி ஒருவருக்கும் மோசடி குற்றச்சாட்டு இருந்து  வருகிறது.கிரிக்கெட் போட்டி ஆய்வாளராக பணியில் இருந்துவந்த அவருக்கு, ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பிரகாரம் 2019இல் இருந்து 7 வருடங்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் போட்டித் தடை விதித்திருப்பதாக செய்தி இருக்கிறது.

அதனால் இந்த அரசாங்கத்தின் கீழ் நிலக்கறி கேள்விக்கோரலை வழங்கியுள்ள நிறுவனத்துக்கும், அதன் உரிமையாளருக்கு மற்றும் உள்நாட்டு பிரதிநிதிகளுக்கும் மாேசடி குற்றச்சாட்டு இருக்கிறுது. இலங்கையில் ஊழல் மற்றும் மோசடி மேற்கொள்வது அரசியல்வாதிகள், உயர் பதவியில் இருக்கும் அரச  அதிகாரிகள், வியாபாரிகள் வளையம் என்ற  மூன்று தரப்பினர் ஒன்றிணைந்த வலையமைப்பிலாகும்.

மேலும் இலங்கை மின்சார சபையை துண்டாக்கி விற்பனை செய்யும் சட்டத்துக்கு எதிராக ஊழியர்கள் போராட்டம்  செய்யும்போது மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவை என தெரிவித்து, ஜனாதிபதி வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார். என்றாலும்  மார்ச் மாதத்தில் கோரப்படும் நிலக்கறி இறக்குமதி கேள்விக்கோரல் ஜூலை மாதம்வரை தாமதிக்கும்போது, மின்சாரம் அத்தியாவசிய சேவை என்பது ஜனாதிபதிக்கு ஏன் நினைவுக்கு வரவில்லை? அதனால் இந்த அரசாங்கம் யாருக்காக செயற்பட்டு வருகிறது என்பதை உணர்ந்துகொள்ள இந்த கேள்விக்கோரல் குழறுபடி மாத்திரம் போதுமானதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06