அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் இப்போதிருந்தே தயாராக வேண்டும் - ரவி கருணாநாயக்க

28 Sep, 2025 | 05:23 PM
image

(எம்.மனோசித்ரா)

தலைமைத்துவம், சின்னம் என வெ வ்வேறு விடயங்களைக் கூறிக் கொண்டு இனியும் பிளவுகளை நோக்கி பயணிக்க கூடாது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் இப்போதிருந்தே தயாராக வேண்டும். அதுவே எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் அபிலாஷையாகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே மக்களின் அபிலாஷையாகவுள்ளது. இது வசனங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்படவில்லை. எனவே இதனை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது மாத்திரமின்றி அதிலிருந்து எவ்வாறு முன்னோக்கிப் பயணிப்பது என்பதில் அவதானம் செலுத்த வேண்டும்.

தலைமைத்துவம், சின்னம் என வெ வ்வேறு விடயங்களைக் கூறிக் கொண்டு இனியும் பிளவுகளை நோக்கி பயணிக்க கூடாது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் இப்போதிருந்தே தயாராக வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி , ஐக்கிய மக்கள் சக்தி என்பது இருவேறு கட்சிகள் அல்ல. இவையிரண்டும் ஒரே கட்சிகளாகும். அதனை நிறைவேற்றுவதற்காக நானும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன்.

கட்சி தலைவர்கள் இதனை ஏற்றுக் கொள்வதைப் போன்றே ஏனையோரும் அதற்கு இணங்க வேண்டும். இன்று அரசியல் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. பெரிய கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. பரந்துபட்ட கூட்டணியின் ஊடாக அனைவரும் இணைந்து பயணித்தால் இந்த பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு காண முடியும். தற்போது ஜே.வி.பி.யினரின் சொத்து விபரங்களைப் பார்க்கும் போது 77 ஆண்டு திறந்த பொருளாதாரத்தின் பலனை நேரடியாகக் காண முடிகிறது.

கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாகவுள்ளவர்கள் தம்மிடம் ஒரு சதம் கூட இல்லை என எதற்காக பொய் கூற வேண்டும்? உண்மையில் ஆளுங்கட்சியின் சொத்து விபரங்களால் எதிர்க்கட்சிகள் கோபமடையவில்லை. மாறாக மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் இந்த நிலைமை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்படாமல் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுவதை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக் கடற்படையின் படகு விபத்து: தொடரும்...

2026-08-16 13:04:58
news-image

ஷங்காய் மாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி அநுர

2026-08-16 08:55:06
news-image

ஆகஸ்ட் 30-இல் சர்வதேச மாநாடு: காணாமல்...

2026-08-16 08:56:43
news-image

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும்...

2026-08-16 11:34:51
news-image

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை...

2026-08-16 09:28:15
news-image

‘ஸ்பைடர் வுமன்’ என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி...

2026-08-16 08:40:39
news-image

சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழி...

2026-08-16 08:39:58
news-image

22 ஆவது திருத்தம் செவ்வாய் பாராளுமன்றில்...

2026-08-16 08:39:12
news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27