இலஞ்சம் ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்கிறார் பிரதியமைச்சர் சுனில் வட்டகல

28 Sep, 2025 | 01:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மக்கள் விடுதலை  முன்னணியின் சட்ட பிரிவில் உறுப்பினராக பதவி வகித்ததாக குறிப்பிடப்படுவது முற்றிலும் பொய்யானது. இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக பணிப்பாளர் நாயகம் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வாரென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை (27) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

மக்கள் முன்னணியின் முன்னாள் உறுப்பினர் நந்தன குணதிலக கட்சியில் இருந்து விலகியதன் பின்னர் கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக பேசுகிறார். ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்துள்ளார். அரசியல் கட்சிகளின் இணைந்துக்கொள்வது அடிப்படை உரிமையாகும்.ஆகவே அவரது தனிப்பட்ட தீர்மானம் பற்றி ஏதும் குறிப்பிட போவதில்லை.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மக்கள் விடுதலை  முன்னணியின் சட்ட பிரிவில் உறுப்பினராக பதவி வகித்ததாக நந்தன குணதிலக குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது.

நீதித்துறையின் சிரேஷ்டத்துவமிக்கவரான இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.இதற்கு எதிராக அவர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எனக்கு எதிராக அண்மையில் கேள்வி கோரல் பத்திரம் அனுப்பி வைத்திருந்தார்.எனக்கு எதிராக அவர் வெகுவிரைவில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும்.இல்லையேல் அவருக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55
news-image

அரச பாடசாலை கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்பள்ளிகளை...

2026-07-19 16:51:27
news-image

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு...

2026-07-19 16:47:25
news-image

120 பயனாளிகளுக்கு கடல் அட்டை உற்பத்திப்...

2026-07-19 16:36:04
news-image

79 இலட்சம் ரூபா பெறுமதியான சீன...

2026-07-19 16:11:11
news-image

நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு

2026-07-19 15:20:17
news-image

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்...

2026-07-19 15:18:46
news-image

அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை...

2026-07-19 15:02:16
news-image

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கின

2026-07-19 14:43:09