பொதுமக்களின் காணிகளை தொடர்ந்து இராணுவத்தினர் விடுவிப்பதன் மூலமே சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு பாரிய பங்களிப்பை வழங்குவதாக இருக்கும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
குறிப்பாக யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்க செயற்பாடுகள் முக்கியமானவையாகும். இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளை விடுவித்து வருவதை வரவேற்கின்றோம் என்றும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர். இது பாராட்டப்படவேண்டிய விடயமாகும். இந்நிலையில் தொடர்ந்தும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
அவ்வாறு காணிகளை விடுவிப்பதன் மூலமே சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு செய்ய முடியும். உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளானது தேசிய மற்றும் இராணுவ நிலைகளில் இடம்பெறுவது முக்கியமாகும். இது நவீன இராணுவ கட்டமைப்புக்கு அவசியமானதாகும்.
உண்மையைக் கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறுதல், நல்லிணக்கத்திற்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் உயர்ந்தரக பங்களிப்பை செய்வதாக இருக்கும். இது பரந்துபட்ட தேசிய மட்டத்தில் அக்கறை கொண்டதாக இருக்கவேண்டும்.
உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புகின்றன. அத்துடன் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கிடையிலும் இவை நம்பிக்கையை கட்டியெழுப்பும். இராணுவத்திற்குள் இவ்வாறு பொறுப்புக்கூறல் இடம்பெறுவதானது நம்பகத் தன்மையை அதிகரிக்கின்றது. விழுமியங்களையும் மதிப்புக்களையும் பலப்படுத்துகின்றது.
2016 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையும் பிரித்தானியாவும் பாதுகாப்பு தொடர்புகளை வலுப்படுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் பாதுகாப்பு தொடர்பான நிபுணர் ஒருவரை யும் நியமித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM