"அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை நஷ்­டத்தில் இருந்து மீட்­கவும் திறை­சே­ரிக்கு வரு­மா­னத்தை ஏற்­ப­டுத்தும் நோக்­கத்­தி­லுமே சீன நிறு­வ­னத்­துக்கு துறை­மு­கத்தை குத்­த­கைக்கு வழங்க அர­சியல் ரீதி­யி­லான தீர்­மானம் எடுக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது" என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல்­துறை அலு­வல்கள் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை நிர்­மா­ணிப்­ப­தற்­காக 193 பில்­லியன் ரூபா சீனா­வி­ட­மி­ருந்து வர்த்­தக கட­னாக பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இதில் 25வீத நிர்­மாண பணி­க­ளையே பூர்த்­தி­செய்ய முடி­யு­மா­கி­யது. அதனால் துறை­மு­கத்தை பூர­ண­மாக செயற்­ப­டுத்த முடி­யு­மான நிலை இருக்­க­வில்லை. இதனை கருத்­திற்­கொண்டு துறை­முகம் தொடர்­பாக அர­சியல் தீர்­மானம் ஒன்றை எடுக்­க­வேண்­டிய நிலை அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டது. 

குறிப்­பாக கொழும்பு துறை­மு­கத்­துக்கு வரக்­கூ­டிய வாக­னங்­களை அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­துக்கு கொண்­டு­வர தீர்­மா­னித்தோம். அத­னால்தான் ஓர­ளவு துறை­மு­கத்தை நடத்­திச்­செல்ல முடி­யு­மா­கி­யது. என்­றாலும் இந்த தீர்­மா­னத்தால் நுகர்­வோ­ருக்கு சற்று பாதிப்பு ஏற்­பட்­டது.

அத்­துடன் இந்த துறை­முகம்  2010 இல்  இருந்து செயற்­பட ஆரம்­பித்­தது. என்­றாலும் துறை­மு­கத்­துக்கு வரும் கப்­பல்­களின் எண்­ணிக்கை மிகவும் குறை­வா­கவே இருந்­தன. இந்த வருடம் ஜூலை வரைக்கும் 10 கப்­பல்­களே வந்­துள்­ளன. அதே­போன்று கடந்த வருடம் 14 கப்­பல்­களும் 2015ஆம் ஆண்டு 17 கப்­பல்­க­ளுமே இங்கு வந்­துள்­ளன. போது­மான வச­திகள் இல்­லாமை கார­ண­மா­கவே  கப்­பல்கள் வர­வில்லை.

மேலும் துறை­முகம் செயற்­பட ஆரம்­பித்­ததில் இருந்து இது­வரை 44 பில்­லியன் ரூபா நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளது. அதே­போன்று கடந்த வருடம் 10 பில்­லியன் ரூபாவும் 2015ஆம் ஆண்டு 18 பில்­லியன் ரூபாவும் துறை­மு­கத்­தினால் நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளது.  எந்த வரு­டத்­திலும் இந்த துறை­மு­கத்­தினால் லாபம் கிட்­ட­வில்லை. அதனால் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் கடனை அடைப்­ப­தற்கு ஏனைய துறை­மு­கங்­களில் இருந்து கிடைக்கும் வரு­மா­னத்தில் இருந்து வரு­டாந்தம் 9ஆயி­ரத்து 100 பில்­லியன் ரூபா செல­வி­ட­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. திறை­சே­ரியில் இருந்து இதற்கு பணம் ஒதுக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யி­லேயே இந்த துறை­மு­கத்தை நஷ்­டத்தில் இருந்து மீட்­ப­தற்கும் அதே­போன்று துறை­மு­கத்தில் இருந்து திறை­சே­ரிக்கு வரு­மானம்  கிடைக்கும் வகை­யிலும்  நட­வ­டிக்கை எடுக்க தீர்­மா­னித்தோம். 

தற்­போது இந்த துறை­முகம் சீன நிறு­வ­னத்­துக்கு குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டதில் திறை­சே­ரிக்கு வரு­டாந்தம் 973மில்­லியன் ரூபா வரு­மா­ன­மாக கிடைக்­கின்­றது.

அத்­துடன் துறை­மு­கத்தின் பெரும்­பான்மை அதி­காரம் இலங்கை அர­சாங்­கத்­துக்கே இருக்­கின்­றது. இதற்­கான பணிப்­பாளர் சபையில் எங்களால் நியமிக்கப் படும் உறுப்பினர்களே பெரும்பான் மையாக இருப்பர். என்றாலும் மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் கொழும்பு துறைமுகத்தின் இரண்டுஇறங்கு துறைகள் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டபோது திறைசே ரிக்கு எந்த வருமானமும் கிடைக்க வில்லை. துறைமுக அதிகாரசபைக்கு மாத்திரமே வருமானம் கிடைத்தது என்றார்.