2025 ஆம் ஆண்­ட­ளவில் கடனே இல்லாத நாடாக இலங்­கையை மாற்­றி­ய­மைப்போம். தற்­போது கடன் செலுத்தி வரு­கின்‍றோம். அடுத்த தலை­மு­றை­யி­னரை கட­னா­ளி­யாக மாற்ற என்னால் இட­ம­ளிக்க முடி­யாது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

அத்­துடன் புத்­தக படிப்­பிற்கு அப்பால் நவீன தொழில்­நுட்­பத்தை முன்­னி­லைப்­ப­டுத்தும் பொரு­ளா­தா­ரத்தை உரு­வாக்­க­வுள்ளோம். இதன்­படி உயர்­தர மாண­வர்­க­ளுக்கு விரைவில் டெப் கணினி வழங் ­கப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

மொரட்­டுவை வேல்ஸ் குமர கல்­லூ­ரியின் நீச்சல் தடா­கத்தை திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்டின் கல்வித் துறையின் அபி­வி­ருத்­திக்கு  நாம் பெரு­ம­ளவில் நிதி ஒதுக்­கீடு செய்து வரு­கின்றோம். இதன்­படி கல்­வி­யினால் மாத்­திரம் நாட்டின் முன்­னேற்றப் பாதையை நிர்­ண­யிக்க முடியும். இதன்­பி­ர­காரம் 13 வகுப்பு வரை கல்­வியை கட்­டா­ய­மாக்­க­வுள்ளோம். ஒவ்­வொரு பெற்­றோரும் தமது பிள்­ளைகள் நல்ல நிலை­மைக்கு வர வேண்டும் என்றே ஆர்வம் கொள்வர். எனவே, எதிர்­கால சந்­த­தி­யி­னரின் வாழ்க்­கையை நல்ல நிலை­மைக்கு கொண்டு வரு­வ­தற்கே நாம் திட்­ட­மிட்­டுள்ளோம்.

இதன்­படி எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு கடன் சுமை­யில்­லாத நாட்டை ஒப்­ப­டை க்க வேண்டும். தற்­போது நாட்டின் கடன் சுமை அதி­க­ரித்­துள்­ளது. இந்த கடன் எவர் எடுத்­தி­ருந்­தாலும் அதனால் எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு பாதிப்­புகள் ஏற்­ப­டாமல் குறித்த கடனை அடைக்க வேண்­டி­யது எமது பொறுப்­பாகும். நாம் இனிமேல் கட­னா­ளி­யாக இருக்க முடி­யாது. முதலில் கடனை அடைக்க வேண்டும். இதற்­கான பணி­களை தற்­போது நாம் ஆரம்­பித்­துள் ளோம். 

பெற்­றோர்­க­ளா­கிய நாம் பிள்­ளைகளை கட­னா­ளி­க­ளாக வைக்க விரும்­ப­மாட்              டோம். அதுபோன்று 2020 ஆம் ஆண்டு வரையில் கடன் செலுத்தி முடிக்க முடி யும். 2025 ஆம் ஆண்­ட­ளவில் கடனே இல்­லாத நாடாக இலங்­கையை மாற்றி அமைப்போம். அத்­துடன் அம்­பாந்­தோட்­ டையில் 10 ஆயிரம் ஏக்கர் மற்றும் ஹொரணை உள்­ளிட்ட பல ஏக்கர்  காணி­களில் நாம் தொழிற்­சா­லை­களை ஆரம்­பிக்­க­வுள்ளோம்.

அத்­துடன் உயர்­தர மாணவர்களுக்கு விரைவில் டெப் கணினிகளை வழங்கவுள் ளோம். இதனை இரு வருடத்திற்கு ஒத் திகை மாதிரி செய்து அதன் பின்னர் பாடத் திட்டத்தை போதிக்க கூடிய நிலைமையை உருவாக்குவோம் என்றார்.