வத்தளை, எலகந்த பகுதியில் கடந்த திங்கட்கிழமை (22) ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , நாடு முழுவதும் பதிவான பல கொள்ளை மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை பொலிஸ் பிரிவின் எலகந்த பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, களனி பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவால் கடந்த திங்கட்கிழமை (22) வயதுடைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் வடக்கு முல்லேரியாவைச் சேர்ந்த 45 வயதுடையவர் என்பதுடன் இவரிடமிருந்து 10.2 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் சந்தேக நபர் இந்த போதைப்பொருளை விற்பனை செய்யும் நோக்கத்துடன் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை (23) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபரை 07 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
இதன்படி , பொலிஸார மேற்கொண்ட மேலும் விசாரணையில், இந்த சந்தேக நபர் பல்வேறு பகுதிகளில் ஆயுதமேந்திய கொள்ளைகள் மற்றும் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.
மேலும், அவர் மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடையவர் என்பதும், கடத்தல்காரர்கள் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி கிரிபத்கொட பகுதியில் ஒரு பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்தல், 2025 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் திகதி கந்தானையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07ஆம் திகதி வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 06, ஆம் திகதி நீர்கொழும்பில் ஒரு வீட்டின் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு, வெளிநாட்டில் வசிக்கும் மூன்று பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உத்தரவின் பேரில் சந்தேக நபர் செயல்பட்ட குற்றச்சாட்டு போன்ற குற்றச்செயல்களில் பிரதான சந்தேக நபராக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குற்றங்களைச் செய்ய சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டு வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களனி குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM