இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்­தைப்­போன்று அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்தம் காட்­டிக்­கொ­டுப்பு என்றால் மஹிந்த ராஜபக் ஷ 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை ஏன் நீக்­க­வில்லை என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல்­துறை அலு­வல்கள் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க கேள்­வி­யெ­ழுப்­பினார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது துறை­முக ஒப்­பந்­த­மா­னது இந்­திய இலங்கை ஒப்­பந்தம் போன்­ற­தொரு காட்­டிக்­கொ­டுப்பு என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருப்­பது தொடர்­பாக ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ரினால் வின­வி­ய­தற்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே இவ்­வாறு கேள்­வி­யெ­ழுப்­பினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீன நிறு­வ­னத்­துக்கு வழங்க அர­சாங்கம் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யா­னது இலங்கை இந்­திய ஒப்­பந்­தம்­போன்று காட்­டிக்­கொ­டுப்­பாகும் என மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருந்தார். அப்­ப­டி­யாயின் அவர் நாட்டில் ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில் இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்­தி­னூ­டாக ஏற்­ப­டுத்­தப்­பட்ட 13ஆவது திருத்­தத்தை ரத்­துச்­செய்­தி­ருக்­கலாம். அவர் ஏன் செய்­ய­வில்லை. அத்­துடன் அவ­ருக்கு பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை இருக்­கும்­போது இதனை ரத்­துச்­செய்­தி­ருக்­கலாம். ஆனால் அவர் செய்­ய­வில்லை. 

9 மாகா­ண­ ச­பை­களில் 7மாகா­ணங்­களில்  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி முத­ல­மைச்­சர்­களே இருக்­கின்­றனர். 88ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மாகா­ண­ச­பையில் போட்­டி­யி­டா­விட்­டாலும் அதன் பின்னர் போட்­டி­யிட்­டது. 13ஆவது திருத்­தத்தை நீக்­கு­வ­தற்கு அதி­காரம் இருந்தும் அவர் அத­னை­செய்­யாமல் இன்று நாங்கள் காட்­டிக்­கொ­டுத்­த­தாக தெரி­விக்­கின்றார்.

அத்­துடன் மஹிந்த ராஜபக் ஷ இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டும்­போது 13ஆவது திருத்தம் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அப்­போது 13க்கு அப்பால் சென்று  நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்தார். இந்த தக­வலை இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் லோக் சபையில் தெரி­வித்தார். இந்த செய்தி ஊட­கங்­களில் வெளி­வந்­த­வுடன் பர­வ­லாக பேசப்­பட்டு வந்­தது. அப்­போது அவரின் ஊட­கப்­பி­ரிவு ஜனா­தி­பதி இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­ச­ருக்கு அவ்­வாறு தெரி­விக்

­க­வில்லை என அறிக்கை வெளி­யிட்­டது. இதனால் இந்­திய இலங்கை நாடு­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­ற­வுக்கும் பாதிப்பு ஏற்­பட்­டி­ருந்­தது. எனவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக ஏற்படுத்தப்பட்ட 13 ஆவதுதிருத்தச்சட்டத்தை ரத்துச்செய்வதற்கு அதிகா ரம் இருந்தும் அதனை செய்யாமல் தற்போது அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் இலங்கை இந்திய ஒப்பந்தம் போன்று காட் டிக்கொடுப்பு என தெரிவிப்பதில் நியாயம் இல்லை என்றார்.