இரத்தினபுரியில் கொலன்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலிவாடிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்ன பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.
வலக்கடை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின் இருக்கையில் இருந்த இரண்டு பெண்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
காயங்களக்குள்ளானவர்கள் கொலொன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் உல்லிதுவாவ பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் கொலன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM