(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையும் இந்தியாவும் கடைசி சுப்பர் 4 போட்டியில் இன்று மோதவுள்ளன.

இப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ளது.
இந்த வருட ஆசிய கிண்ணம் இலங்கைக்கு முடிந்து போன கதையாகிவிட்ட நிலையில் இந்தியாவுக்கு இறுதி ஆட்டத்துக்கான ஒத்திகையாக அமையவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் ஒரு வருடத்திற்கு முன்னர் சந்தித்துக்கொண்ட 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா ஜமாய்த்திருந்தது. அதில் சமநிலையில் முடிவடைந்த ஒரு போட்டி சுப்பர் ஓவரில் தீர்மானிக்கப்பட்டது.
இப்போது ஆசிய கிண்ண சுப்பர் 4 சுற்றில் இரண்டு தோல்விகளுடன் போட்டியிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இலங்கை, தோல்வி அடையாத அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியாவை இன்று சந்திக்கவுள்ளது.
பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான சுப்பர் 4 போட்டிகளில் மோசமான துடுப்பாட்டம், மோசமான களத்தடுப்பு ஆகியன காரணமாக இலங்கை தோல்விகளைத் தழுவியிருந்தது.
இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி கணிசமான மொத்த எண்ணிக்கைகளைப் பெறத் தவறியிருந்தது.
ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் பிரகாசிக்கத் தவறுவது இலங்கைக்கு பெரும் பாதகமாக அமைந்தது.
இலங்கை அணிக்கு இனியும் இழக்க எதுவும் இல்லை என்பதால் இன்றைய போட்டியில் துணிச்சலை வரவழைத்து ஆக்ரோஷத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கலாம்.
வீரர்கள் துணிச்சல், ஆக்ரோஷம் ஆகியவற்றுடன் தன்னம்பிக்கையுடன் திறமையை வெளிப்படுத்தினால் மாத்திரமே இலங்கைக்கு வெற்றி கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
இதுவரை ஒரு போட்டியிலும் விளையாடாமல் இருந்தவரும் ஜனித் லியனகேவுக்கு இன்றைய தினம் வாய்ப்பு வழங்கப்படுமா என இரசிசர்கள் கேள்வி எழுப்பியவண்ணம் உள்ளனர்.
அவரை ஒரு மேலதிக துடுப்பாட்ட வீரராக குழாத்தில் இணைத்துக்கொண்ட தெரிவாளர்கள் அவரை வெறும் 'பொம்மை'யாக வைத்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த சுற்றுப் போட்டியில் இதுவரை தோல்வி அடையாமல் இருக்கும் இந்தியா, அதனைத் தக்கவைத்துக்கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேற முயற்சிக்கும் என்பது நிச்சயம்.
இன்றைய போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
ரின்கு சிங் அல்லது ஜீட்டேஷ் ஷார்மா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அணிகள்
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலன்க (தலைவர்), கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, நுவன் துஷார.
இந்தியா: அபிஷேக் ஷர்மா, ஷுப்மான் கில், சூரியகுமார் யாதவ் (தலைவர்), சுஞ்சு செம்சன், ரின்கு சிங் அல்லது ஜீட்டேஷ் ஷர்மா, ஷிவம் டுபே, ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், ஹர்ஷித் ரானா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM