அதானி காற்றாலை மின்சாரம் கொள்முதல் கட்டணங்கள் மீளாய்வு – கருத்திட்டம் இரத்து தேவையில்லை ; குமார ஜெயகொடி

26 Sep, 2025 | 05:28 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்)

அதானி காற்றாலை  திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும்  மின்சாரத்தை கொள்முதல்  செய்வதற்கு  கடந்த அரசாங்கம் ஒப்புக் கொண்ட  கட்டணங்களை மீள் பரிசீலனை செய்ய  தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு திட்டக் குழு மற்றும் கொள்முதல் குழுவை  நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. திட்ட முன்மொழிவு மீளப்பெறப்பட்டதால்  அதானி  குழுமத்துடனான கருத்திட்டத்தை இரத்துச் செய்ய வேண்டிய அவசியமில்லை  என வலுசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  பதிலளித்ததாவது,

கடந்த அரசாங்கம்  இந்தியாவின் அதானி நிறுவனத்துடன்  மின் உற்பத்தி  நிலைய கருத்திட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கையில் காற்றாலை மின்சாரத்தை ஊக்குவிப்பதற்காக இந்தியாவின் அதானி குழுமத்தின் துணை  நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமி டெட்  நிறுவனம் 2022.03.11 ஆம் திகதியன்று  நிதி அமைச்சு, மின்சார அமைச்சு, மின்சார சபை, இலங்கை  நிலையான எரிசக்தி ஆணைக்குழு, இலங்கை  முதலீட்டு  ஊக்குவிப்பு சபை  ஆகிய தரப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும்  மின்சாரத்தை கொள்முதல்  செய்வதற்கு  கடந்த அரசாங்கம் ஒப்புக் கொண்ட  கட்டணங்களை மீள் பரிசீலனை செய்ய  அரசாங்கம்  தீர்மானித்துள்ளது.இதற்காக ஒரு திட்டக் குழு மற்றும் கொள்முதல் குழுவை  நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதானி நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட முன்மொழிவை  திரும்பப் பெறுவதாக அதானி கிரீன் எனெர்ஜி லிமிடெட், இலங்கை முதலீட்டுச் சபைக்கு  2025.02.12 ஆம் திகதியன்று கடிதம் ஊடாக அறிவித்துள்ளது.திட்ட முன்மொழிவு மீளப்பெறப்பட்டதால் கருத்திட்டத்தை இரத்துச் செய்ய வேண்டிய அவசியமில்லை.

மின்சார சபை மற்றும் நிலையான எரிசக்தி ஆணைக்குழு இணைந்து எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ள பாரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க  எரிசக்தித் திட்டங்களுக்கு  தேவையான சாத்தியக்கூறு  ஆய்வுகளை நடத்துதல், சுற்றுச்சூழல் மற்றும்  காணிகளை கையகப்படுத்தல் போன்ற  ஆரம்ப பணிகளை நிறைவு  செய்தல்,  போன்ற நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 சர்வதேச போட்டி மனுகோரிக்கை முறை மூலம்  திட்டங்களை கோருவதன் மூலமும்  போட்டி தொழில்நுட்ப மற்றும்  நிதி முன்மொழிவுகளை சமர்ப்பிக்க அனுமதித்தல்,இதனால்  முதலீட்டாளர்களுக்கு அந்நிய செலாவணி அபாயத்தை சுமத்தாது கொள்முதல் செய்த மின் சக்திக்கு டொலர்  மூலம் பணம் செலுத்தல்,அத்துடன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணம் செலுத்துவதைப் பாதுகாக்க  ஒரு கட்டண உத்தரவாத பொறிமுறையை  செயற்படுத்த உலக  வங்கியுடன்  ஆரம்ப கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் திருப்தி;...

2026-07-16 00:11:56
news-image

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது...

2026-07-15 15:41:12
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?...

2026-07-15 14:21:29
news-image

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப்...

2026-07-15 14:11:31
news-image

ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா?...

2026-07-15 14:28:40
news-image

நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க...

2026-07-15 15:17:17
news-image

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது...

2026-07-15 15:04:25
news-image

அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது...

2026-07-15 14:04:14
news-image

அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள்...

2026-07-15 19:30:32
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கங்கள் அடைந்திருக்கும்...

2026-07-15 19:29:50
news-image

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை...

2026-07-15 19:31:02
news-image

ஏழை தொழிலாளர்களை அழித்து வெளிநாட்டு ஊழியர்களை...

2026-07-15 19:31:37