பலாலி விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளது ; பிமல் ரத்நாயக்க

26 Sep, 2025 | 05:27 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்)

பலாலி விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு (ஆகஸ்ட்) 85  மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில்  இலாபமடைந்துள்ளது. நிபுணத்துவ திட்டமிடலுக்கு அமைய பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுமே தவிர அரசியல்வாதிகளின் நோக்கங்களுக்காக அல்ல என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்  பிமல்  ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (26)  நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27 / 2 இன் கீழ்  பாராளுமன்ற உறுப்பினர்  அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பலாலி விமான நிலைய  அபிவிருத்திக்காக 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில்    2025.09.21  ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 150 மில்லியன்  ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. காங்கேசன்துறை இறங்குதுறை அபிவிருத்திக்கு 3455 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை  துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் 2020 ஆம் ஆண்டு  இந்தியாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகிறது.பலாலி விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு 82 மில்லியன்  ரூபாய், 2023 ஆம் ஆண்டு 15 மில்லின்   ரூபாய், 2024 ஆம் ஆண்டு 76  மில்லியன் ரூபாய்,  2025 ஆம் ஆண்டு (ஆகஸ்ட்) 85  மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில்  இலாபமடைந்துள்ளது.

1950  ஆம் ஆண்டு சிவில் விமான சேவைகள் திணைக்கள திட்டமிடல் இலக்கம் (PPA)  1597  பிரகாரம்  பலாலி விமான நிலையத்துக்கு 349 ரூட்  03 பேச்சர்ஸ் 35. 9 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக செலுத்தப்பட்ட நட்டஈடு தொடர்பான  தகவல்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ளன.ஏனைய   காணிகள்   சிவில் விமான சேவைகள் திணைக்களத்தால் சுவீகரிக்கப்படவில்லை. இதற்கான  தகவல்கள் பாதுகாப்பு அமைச்சிடம் உள்ளன.

பலாலி விமான நிலையத்தை  விரிவுப்படுத்துவதற்கான காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு  அபிவிருத்தி பணிகள் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம்  கேள்விகளை கேட்பது பொறுத்தமானதாக அமையும். 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  விமான நிலையம் மற்றும் துறைமுக அபிவிருத்திக்காக காணிகள் கைப்பற்றப்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 19:54:35
news-image

மூதூரில் டிப்பர் வாகனத்தில் கட்டாக்காலி மாடு...

2026-02-17 17:01:19
news-image

இலங்கை மற்றும் ஜப்பான் இடையே பொருளாதார...

2026-02-17 16:44:37