இன்றைய சூழலில் எம்மில் பலருக்கு பொருளாதார நெருக்கடி என்பது விவரிக்க முடியாத அளவிற்கு இருக்கும். அவர்கள் கடன் வாங்கியிருந்தாலும் அதற்கான வட்டியை தவறாமல் செலுத்திக்கொண்டிருந்தாலும் மன அழுத்தத்துடனும், நெருக்கடியுடனும் தான் தொழில் செய்து கொண்டிருப்பார்கள். இவர்களிடம் பேச்சுக் கொடுத்தால்.. ' எமக்கு சாதாரண அதிர்ஷ்டம் போதாது.
ஜாக்பாட் கிடைக்க வேண்டும். அப்போதுதான் எம்மால் ஓரளவேனும் நிம்மதியாக இருக்க இயலும்'' என்பார்கள். இதனை ஆன்மீக ரீதியில் விவரிக்க வேண்டும் என்றால்... இத்தகைய நிலையில் உள்ளவர்கள் விபரீத ராஜ யோகத்தை எதிர்பார்க்கிறார்கள் என பொருள் கொள்ளலாம். இத்தகைய விபரீத ராஜயோகம் கிடைப்பதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள்: பித்தளை தட்டு, துளசி, பச்சைக் கற்பூரம், அகல் விளக்கு, நெய், பஞ்சு திரி, ஏலக்காய்.
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளுக்கு பிரத்யேக பிரபஞ்ச ஆற்றல் உண்டு. இந்த நாளில் விரதம் இருந்து பெருமாளையும் , மகாலட்சுமி தாயாரையும் வழிபடுபவர்களுக்கு அவர்களின் செல்வ நிலை மேம்படும். அதிலும் குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு பச்சைக் கற்பூரம் - ஏலக்காய்- துளசி -கலந்த தீர்த்தத்தை நைவேத்தியமாக சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன் ஒரு பித்தளை தட்டில் துளசி இலையை பரப்பி, அதன் மீது சிறிதளவு பச்சை கற்பூரமும், அகல் விளக்கு ஒன்றினையும் வைத்து அதில் பசு நெய்யை ஊற்றி, பஞ்ச திரியை வைத்து, தீபமேற்றி வழிபட வேண்டும். இந்தத் தருணத்தில் பெருமாளையும், தாயாரையும் மனதில் நிறுத்தி பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு விபரீத ராஜயோகம் வேண்டும்.
இதனை அருள் புரிவாயாக! என பிரார்த்திக்க வேண்டும். இந்த புரட்டாசி சனிக்கிழமையில் தொடங்கும் இத்தகைய சூட்சமமான வழிபாட்டை தொடர்ந்து 11 சனிக்கிழமைகளுக்கு தொடர்ந்தால்.. அதன் பிறகு உங்களுடைய வாழ்க்கையில் நீங்களே எதிர்பாக்காத அளவிற்கு ஜாக்பாட் பரிசு கிடைக்க பெறும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM