அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதில் இருந்து வர்த்தகப் போரைத் தூண்டிவரும் டொனால்ட் டிரம்ப், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டிரம்ப்பின் இந்த அதிரடி முடிவு, அமெரிக்காவுக்கு மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஏனைய நாடுகளின் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், 'அமெரிக்காவில் தயாரிப்போம்' என்ற கொள்கையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நாடுகளுக்கு எதிராக அதிக இறக்குமதி வரிகளை விதித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் தொழிற்சாலைகளை அமைத்திருந்தால், அந்த நிறுவனங்களுக்கு இந்த வரி பொருந்தாது என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சமையலறை உபகரணங்களுக்கு 30 சதவீதம் இறக்குமதி வரி, குளியலறை உபகரணங்களுக்கு 30 சதவீதம் இறக்குமதி வரி, அலங்காரப் பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் இறக்குமதி வரிகள் அனைத்தும் வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வர உள்ளன.
இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் ஏற்கனவே கூடுதல் வரிகளை அறிவித்திருந்தார்.
குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா தெரிவித்ததாகவும் இந்தக் கொள்முதல் காரணமாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு ஏற்கனவே 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தற்போது மருந்துப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 100 சதவீத வரி, இந்திய மருந்து நிறுவனங்களின் ஏற்றுமதி வருவாயைப் பெரிதும் பாதிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM