எம் மீது பழி சுமத்தி போதைப்பொருள் வியாபாரிகளையும் பாதாள கும்பல்களையும் பாதுகாக்க வேண்டாம் - நாமல் ராஜபக்ஷ 

25 Sep, 2025 | 05:32 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

'தெஹ்ரானில் இருந்து இரண்டு கொள்கலன்கள் ஊடாக போதைப்பொருள் தொகை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது' என்று  சர்வதேச புலனாய்வு பிரிவு அறிவித்தும் பாதுகாப்பு தரப்பினர் ஏன் உரிய நடவடிக்கைகளை  மேற்கொள்ளவில்லை. எம் மீது பழியை சுமத்தி போதைப்பொருள் வியாபாரிகளையும், பாதாள கும்பல்களையும் பாதுகாக்க வேண்டாம். 323 கொள்கலன்கள்  விடுவிப்பு விவகாரத்தை  அரசாங்கம் மூடி மறைக்கிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் மீதான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது...

 அனைத்து இலக்குகளையும் அடைந்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆம் கொள்கலன்கள்  விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவித்தவரை கண்டுபிடித்தால்  கொள்கலன்கள் இருக்கும் இடத்தை கண்டுப்பிடிக்கலாம். இவர்கள் அரசாங்கத்தில் உள்ளார்கள் ஆனால் நாங்கள் கொள்கலன்களை விடுவித்ததாக எம்மீது பழி சுமத்துகிறார்கள்.

மக்களை ஏமாற்றி, வரையறையற்ற வகையில் பொய் சொன்ன அரசாங்கமே இந்த அரசாங்கம்  காணப்படுகிறது.தற்போது குடு அரசாங்கமாக மாறியுள்ளது. தமது  குறைப்பாடுகளை மறைத்துக் கொள்ள பிறர் மீது பழிபோடும் கொள்கையில் இருந்துக்கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.

போதைப்பொருள் பற்றி பேசப்படுகிறது. உண்மையை கண்டுப்பிடியுங்கள். போதைப்பொருள் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். சர்வதேச புலனாய்வு பிரிவு 'தெஹ்ரானில் இருந்து இரண்டு கொள்கலன்கள் ஊடாக  போதைப்பொருள் தொகை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது' என்று அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. பொலிஸார் சோதனை செய்துள்ளார்கள். ஆனாலும் விடுவிக்கப்பட்டுள்ள கொள்கலன்களில்  போதைப்பொருள் இருப்பதாக தற்போது குறிப்பிடப்படுகிறது. பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில்  என்னவிருந்தது.

பழைய முறையில் நாட்டை நிர்வகிக்கலாம்  என்று  அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது. அந்த பழைய காலம் முடிவடைந்து விட்டது.கொள்கலன்களை விடுவித்து விட்டு எம்மை தூற்றாதீர்கள். புலனாய்வு தகவல்கள் கிடைத்தும் ஏன் நடவடிக்கைளை எடுக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி கிடைத்த புலனாய்வுத் தகவல்களை அலட்சியப்படுத்தியவர்கள் இந்த அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளார்கள்.தற்போதும் புலனாய்வு  தகவல்களை அலட்சியப்படுத்துகிறார்கள்.

 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பழியையும் எம்மீது சுமத்தினீர்கள். குண்டுத்தாக்குதல்தாரிகளின் தந்தை  மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர், குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித உட்பட பலருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கடமையை செயற்படுத்தாத இரண்டு  அதிகாரிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு உயர் பதவிகளை வழங்கியுள்ளீர்கள்.

எம் மீதான பகைமையை பிறிதொரு வழியில் தீர்த்துக்கொள்ளுங்கள். போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள குழுக்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். எம் மீது குற்றஞ்சாட்டும்போது உண்மை குற்றவாளிகள் தப்பித்துக்கொள்வார்கள். ஆகவே, பொறுப்புடன் செயற்படுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை

2026-04-13 12:02:43
news-image

நுகர்வோர் பாதுகாப்பு ஏப்ரல் 30 வரை...

2026-04-13 11:25:16
news-image

உற்சவ கால விசேட சுற்றிவளைப்பு: 817...

2026-04-13 11:14:06
news-image

அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானங்களே நாட்டின் எதிர்கால...

2026-04-13 10:56:57
news-image

நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான 3...

2026-04-13 10:51:45
news-image

மருதானையில் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்...

2026-04-13 10:13:35
news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53