நவராத்திரி திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வரும் பலரும் இந்த ஒன்பது நாட்களுக்குள் முப்பெரும் தேவியரை வணங்கி சுபமான பலன்களை பெற்று வருவர். சிலருக்கு இறைவழிபாட்டில் சடங்கு சம்பிரதாயங்களை முழுமையாக பின்பற்றினாலும்... அவர்களின் எண்ணப்படி எதுவும் ஈடேறி இருக்காது. இதனால் தங்களது கர்மாவை நினைத்து துன்பப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் நீங்கள் நினைத்த காரியம் ஈடேற வேண்டும் என்றால்.. சக்தி வாய்ந்த பிரத்யேக தீப வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று எம்முடைய முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள்: பித்தளையினாலான சிறிய தட்டு, அகல் விளக்கு, பிரத்யேக தீப எண்ணெய், ( தேங்காய் எண்ணெய் -நெய்- தேன்-) தாமரை மணி விதை, நெல் , வாழைத்தண்டு திரி, மட்டை தேங்காய், குங்குமம், மஞ்சள், பன்னீர்.
உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் என்னவோ அந்த நாளன்று அல்லது வளர்பிறை தசமி திதி நாளன்று அல்லது பௌர்ணமி நாளன்று பித்தளையாலான சிறிய தட்டில் நெல்லை பரப்பி , அதன் மீது அகல் விளக்கை வைத்து, அரை கிலோ தேங்காய் எண்ணெய் +100 கிராம் நெய் + பத்து துளிகள் தேன் கலந்து தயாரிக்கப்பட்ட பிரத்யேக தீப எண்ணெய்யை அந்த அகல் விளக்கில் ஊற்றி, அந்த எண்ணெயில் தாமரை மணி விதையை இடம்பெறச் செய்து, அதில் வாழைத்தண்டு திரியை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்தை மட்டை தேங்காய் ஒன்றை நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி வந்து அதனை பன்னீரில் சுத்திகரித்து மஞ்சளும், குங்குமமும் பொட்டாக வைத்து அதனை உங்களுடைய அதிர்ஷ்டத்தை அளிக்கும் தேவதையாக பாவித்து விளக்கினை ஏற்ற வேண்டும். இப்போது அந்த பிரத்யேக தீபத்தின் பலனை எமக்கு அருள வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும். இந்தப் பிரார்த்தனையை ஒவ்வொரு மாதமும் உங்களுடைய ஜென்ம நட்சத்திர தினத்தன்று மேற்கொள்ள தொடங்கினால்... வாழ்க்கையில் நீங்கள் நினைத்த காரியங்கள் சித்தி அடைவதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM