(நெவில் அன்தனி)
பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான ரி20 ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (25) இரவு நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்கும் 'மெய்நிகர்' அரை இறுதி அல்லது நொக் - அவுட் போட்டியாக அமைவதுடன் அப் போட்டியில் வெற்றிபெறும் அணி இந்தியாவை ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் எதிர்த்தாட தகுதிபெறும்.
எனவே இன்றைய போட்டியில் என்னவிலை கொடுத்தேனும் வெற்றிபெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இரண்டு அணிகளும் களம் இறங்கும் என்பது நிச்சயம்.

இந்த சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றிபெறவில்லை. முதல் சுற்றிலும் சுப்பர் 4 சுற்றிலும் ஒன்றுவிட்டு ஒரு போட்டியிலேயே பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.
இரண்டு சுற்றுகளிலும் இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான், மூன்றாவது தடவையாக குறிப்பாக இறுதிப் போட்டியில் தனது பரம வைரியான இந்தியாவை சந்திக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இன்றைய போட்டியில் வெற்றிபெற முயற்சிக்கவுள்ளது.
சுப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிராக ஈட்டிய வெற்றியுடன் அதே வீரர்களுடன் பாகிஸ்தான் புத்துணர்ச்சி பெற்ற அணியாக களம் இறங்கவுள்ளது.

மறுபுறத்தில் பங்களாதேஷ் இந்த சுற்றுப் போட்டியில் சிறப்பாக விளையாடிவந்துள்ளது எனலாம். அண்மைக்காலங்களில் சர்வதேச ரி20 அரங்கில் மாறுபாடான அதேவேளை எதிர்பாராத முடிவுகளை எதிர்கொண்டுவந்துள்ள பங்களாதேஷ் அணி இளம் வீரர்களுடன் வெகுவாக முன்னேறிவருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் உபாதை காரணமாக விடுகை பெற்ற வழமையான அணித் தலைவர் லிட்டன் தாஸ், வேகப்பந்துவீச்சாளர் தஸ்கின் அஹ்மத் ஆகிய இருவரும் இன்றைய போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிராக விளையாடிய பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன், மொஹம்மத் சய்புதின் ஆகிய இருவரும் நீக்கப்படவுள்ளனர்.
அணிகள்
பாகிஸ்தான்: ஷஹிப்ஸதா பர்ஹான், பக்கார் ஸமான், சய்ம் அயூப், சல்மான் அகா (தலைவர்), ஹுசெய்ன் தலாத், மொஹம்மத் ஹரிஸ், மொஹம்மத் நவாஸ், பாஹீம் அஷ்ரவ், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவூப், அப்ரார் அஹ்மத்.
பங்களாதேஷ்: தன்ஸித் ஹசன், சய்ப் ஹசன், லிட்டன் தாஸ் (தலைவர்), தௌஹித் ரிதோய், ஷமிம் ஹொசெய்ன், ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசெய்ன், தன்ஸிம் ஹசன் சக்கிப், நசும் அஹ்மத், தஸ்கின் அஹ்மத், முஸ்தாபிஸுர்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM